விபத்தில் சிக்கியது அந்தியூர் திமுக எம்எல்ஏ வெங்கடாசலம் கார்.. காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
ஈரோடு: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க சென்னை வந்போது, விபத்தில் சிக்கி அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் படுகாயமடைந்தார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், நடுவா்கள், பயிற்சியாளா்கள் பங்கேற்க உள்ளனா். இதனால் செஸ் ஒலிம்பியாட் போட்டி களைகட்டியுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதன் தொடக்க விழாவில், திமுக-வைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க சென்னை வந்போது, அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்தின் வாகனம் விபத்தில் சிக்கியது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பிரான ஏ.ஜி.வெங்கடாசலம். சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்காக. நேற்று இரவு ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, இரவு 11:30 மணியளவில் அந்தியூரில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தார்.
அப்போது அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. திமுக எம்.எல்ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் வந்த கார், பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. படுகாயம் அடைந்தார். எம்எல்ஏ வெங்கடாசலத்திற்கு விழா எலும்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளரும் லேசான காயம் அடைந்தனர்.
இதையடுத்து ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்ற எம்.எல்.ஏ, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மழையின் காரணமாக திமுக எம்எல்ஏ வாகனம் விபத்தில் சிக்கி, எம்எல்ஏ படுகாயமம் அடைந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications