ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெள்ளாளர் முன்னேற்ற கழகம் அதிரடி! வேட்பாளர் அறிவிப்பு.. யாரு பாருங்க!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக, நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகள் சார்பிலும் ஓ பன்னீர் செல்வம் அணி சார்பிலும் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் தான் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு எம்எல்ஏவானார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி திருமகன் ஈவெரா துரதிர்ஷ்டவசமாக காலமானார். அடுத்த 6 மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

பிரசாரம் துவக்கிய திமுக
இது ஒருபுறம் இருக்க ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் என்பது திமுகவுக்கு மிகவும் முக்கியமானதாகும். 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது கடந்த 2 ஆண்டு ஆட்சிக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண்ணாக பார்க்கப்படுகிறது. இதில் தோல்வியடைந்தால் திமுகவுக்கு பின்னடைவாகும். இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸை விடவும் வேட்பாளர் அறிவிப்பு முன்பே திமுக அங்கு பிரசாரத்தை துவக்கியது. அமைச்சர்கள் முத்துசாமி, கேஎன் நேரு ஆகியோர் வீடு வீடாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

தேமுதிக போட்டி
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சில நாட்களில் வேட்பாளர் இறுதி செய்யப்பட உள்ளார். அதேபோல் ஓ பன்னீர் செல்வமும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறார். சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

வெள்ளாளர் முன்னேற்ற கழகம்
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் போட்டியிடுவதாக தெரிவித்து வேட்பாளரை அறிவித்துள்ளது. இதுபற்றி அதன் மாநில தலைவர் அண்ணா சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛வெள்ளாளர் முன்னேற்ற கழகம் ஆட்சி மன்ற குழு பரிசீலித்து வருமு் 27.02.2022 தேதியன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநி கழக நிர்வாகிகள் பரிந்துரையின் பேரிலும், தலைவர் அண்ணா சரவணன் ஒப்புதலின் பேரிலும் கழக இளைஞரணி தவைர் என்என்டி ராஜா அதிகாரப்பூர் வேட்பாளராக நிறுத்ததப்படுகிறார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications