14 வயதில் இருந்தே ஈரோடு சிறுமியிடம் எடுக்கப்பட்ட கருமுட்டைகள்.. விசாரணையில் பரபரக்கும் தகவல்கள்!
ஈரோடு: சிறுமியிடம் இருந்து 14 வயது முதலே கருமுட்டை எடுக்கப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் இந்திராணி தம்பதி. இந்த தம்பதியினருக்கு ஒரே மகள். சிறுமிக்கு 4 வயது இருக்கும் போதே சரவணன் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து இந்திராணி, இரண்டாவதாக சையத் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த சிறுமி 12 வயதை எட்டியவுடன் அவருக்கு வளர்ப்பு தந்தையால் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாக தெரிகிறது.
Recommended Video

இந்திராணி
இந்திராணி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தனது கருமுட்டையை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. ஒரு கருமுட்டை வழங்கினால் 20 ஆயிரம் ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் தனது ஒரே மகள் என பாராமல் சிறுமியின் கருமுட்டையையும் விற்பனை செய்வதற்கு இந்திராணியும் சையத்தும் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோட்டில் தனியார் மருத்துவமனை
தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியின் கருமுட்டைகள் 8 முறை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த 16 வயது சிறுமியை 22 வயது என பொய்யாக வயதை குறிப்பிட்டு பானு மகாலிங்கம் என்ற பெயரில் திருமணமாகிவிட்டதாகவும் பொய் சான்றுகளை சமர்ப்பித்து கருமுட்டைகளை விற்பனை செய்தது வந்தது தெரியவந்தது.

இடைத்தரகர்
இவர்களுக்கு உடந்தையாக மாலதி என்ற இடைத்தரகர் இருந்துள்ளார். இந்த நிலை இது தொடர்பாக சிறுமி புகாரின் பேரில் இந்திராணி, சையத் அலி, இடைத்தரகர் மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக சூரம்பட்டியை சேர்ந்த அந்தோணி ராஜின் மகன் ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை
இவர்தான் சிறுமியின் வயதை 16 லிருந்து 22 ஆக ஆதார் கார்டில் மாற்றிக் கொடுத்துள்ளார். சிறுமியின் கருமுட்டைகள் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும், ஆந்திராவிலும் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

16 வயது சிறுமி
ஈரோட்டில் 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி அவருடைய கரு முட்டையை விற்பனை செய்ததாக தாய், வளர்ப்பு தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து ஒசூரில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் கூறுகையில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தனியார் மருத்துவமனையின் கருத்தரிப்பு மையங்களிலும் 3 ஆண்டு ஆவணங்களை பெற்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

14 வயது முதல் கருமுட்டை விற்பனை
சிறுமியிடம் 14 வயது முதலே கருமுட்டை எடுக்கப்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது என்றார். இந்த கருமுட்டை விற்பனை தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் வேறு யாரேனும் சிறுமிகளுக்கும் இது போல் கருமுட்டை எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications