ஈரோடு அரசு பஸ்ஸில் யார் பாருங்க.. மழையில் நனைந்தபடியே..கூரை ஓட்டையில் ஒழுகிய நீரால் பல்லிளித்த பவானி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில், அரசு பேருந்தில் நடந்த அவலம்தான், வீடியோவாக வெளிவந்து, அதிர்ச்சியையும், கவலையையும் கூட்டி வருகிறது.. இது குறித்து பலரும் முக்கிய கோரிக்கையை அரசுக்கு விடுத்து வருகிறார்கள்.
சமீப நாட்களாகவே, அரசு பஸ்களின் பராமரிப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. கடந்த மாதம் திருச்சி நகர பஸ்ஸில், கண்டக்டர் சீட்டிலிருந்து, நெட்டு போல்டு திடீரென கழண்டுவிட்டது.. இதனால், சீட்டில் உட்கார்ந்திருந்த கண்டக்டர் பஸ்சுக்கு வெளியே தூக்கி எறியப்பட்டு, தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது.

இதற்கு பிறகு அடுத்த சில தினங்களில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், பஸ்ஸின் பின்பக்க படிகட்டு உடைந்து சாலையின் நடுவே விழுந்தது...
இந்த வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அதிரடி உத்தரவினை பிறப்பித்திருந்தது.
மேற்கூரைகள்: இதையடுத்து, அரசு பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுகளை முன்னெடுத்திருந்தனர்.. ஆனால், இதற்கு பிறகும்கூட, அரசு பஸ்களின் அவலம் நீடித்து கொண்டேயிருக்கிறது.
இன்றுகூட ஈரோடு மாவட்டத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. சமீப நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது.. அந்தவகையில், ஈரோட்டிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

பயணிகள்: நேற்றிரவு ஈரோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து சித்தோடு வழியாக பவானி சென்ற 3B என்ற அரசு பஸ்ஸில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கனமழை பெய்துவிட்டது. இதனால் பஸ்ஸின் மேற்கூறையில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் பஸ்ஸுக்குள்ளேயே ஒழுகியது. பயணிகள் சீட்டில் உட்கார முடியாமல் அவதிப்பட்டனர்..
பஸ்சின் மேற்கூரை ஓட்டை உடைசலுடன் இருந்த நிலையில், மழையும் திடீரென வந்துவிட்டதால், தண்ணீர் முழுவதும் பயணிகளின் மீதே கொட்டியது.. பஸ் உள்ளே பலரும் மழையில் நனைந்தபடி சென்றனர். சிலர் சீட்டில் உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் அவதிப்பட்டனர்.. சிலர் தங்கள் கைகளில் கொண்டுவந்திருந்த குடையை பிடித்து கொண்டே பஸ்ஸில் பயணம் செய்யும் அவலநிலைக்கு ஆளாகினர்.

கோரிக்கை: இந்த சம்பவத்தை பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார்.. அந்த வீடியோதான் இணையத்தில் தற்போது வெளியாகி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்துவருகிறது.. இனியாவது பழைய பஸ்களை மாற்றி, புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications