TNPSC குரூப் 2 தேர்வு எழுதச் சென்ற வனக் காப்பாளர் பலி.. அந்தியூரில் சோகம்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அந்தியூரில் வனக் காப்பாளராக பணியாற்றி வரும் நவீன் (27), இன்று குரூப் 2 தேர்வு எழுத பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

பர்கூர் மலைப் பாதையில் நெய்கரை என்ற இடத்தில் வளைவில் திரும்பும் போது சரக்கு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TNPSC Group 2 Exam in Anthiyur

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று (நவ.1) நடைபெறுகிறது. இத்தேர்வை எழுத 4,89,897 பேர் விண்ணப்பித்த நிலையில், 1,84,131 ஆண்கள், 3,05,719 பெண்கள், 35 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 4,89,885 தேர்வர்கள் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 38 மாவட்டங்களில் 1,647 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 11ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு 821 காலிப்பணியிடங்களுக்கு வெளியானது. அதைத்தொடர்ந்து, செப்டம்பர் 9 வரை விண்ணப்பம் பெறப்பட்டது. அதன் பின்னர், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 846 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி, இத்தேர்வின் மூலம் குரூப் 1 பதவிகளில் 43 காலிப்பணியிடங்களும், குரூப் 2 பதவிகளில் 803 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.

இன்று காலை 9 மணிக்கு தேர்வு தொடங்கியது. இந்நிலையில், குரூப் 2 தேர்வு எழுதச் சென்ற நவீன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அந்தியூரில் வனக் காப்பாளராக பணியாற்றி வரும் நவீன் (27) இன்று குரூப் 2 தேர்வு எழுத பைக்கில் சென்றார். பர்கூர் மலைப் பாதையில் நெய்கரை என்ற இடத்தில் வளைவில் திரும்பும் போது சரக்கு வாகனத்தில் மோதி நவீன் சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், நவீன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+