ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

Google Oneindia Tamil News

ஈரோடு: அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 1.68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த நம்பியூரில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தாண்டு 1 லட்சத்து 68 ஆயிரத்து 414 மாணவா்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனா் என்றார். தனியார் பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது என்பது தவறானது என்றும் விளக்கமளித்தார்.

Increase of student enrollment in government schools

அரசுப் பள்ளிகளை அனைவரும் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அவற்றை மேம்படுத்தமுடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். 2013, 2014ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வெழுதி 82 ஆயிரம் பேர் பணி வாய்ப்புக்காக காத்திருப்பதாகத் தெரிவித்த செங்கோட்டையன், கலந்தாய்வு மூலம் பாடவாரியாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.

வரும் ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு காலணிகளுக்குப் பதில் ஷூ சாக்ஸ் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் இலவசமாக 3 டயாலிஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, அரசுப் பள்ளிகளில் உள்ள பயோமெட்ரிக் வருகை பதிவு இயந்திரங்களில் இனி இந்தி மொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

English summary
Minister Sengottaiyan said that Increase of student enrollment in government schools
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X