இஸ்லாமியர்களுக்கு இட ஒதுகீட்டை 7% ஆக்குங்க.. மதவாத சக்திகளை தோற்கடிக்கனும்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானம்!
சென்னை: ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் மாநில பொதுக்கூட்டத்தில், இஸ்லாமியர்களுக்கு 7 சதவீதம் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும், மதவாத சக்திகளையும், அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளவர்களையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிளவுபடுத்தும் சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிப்பதாகவும் பாஜகவை மறைமுகாக விமர்சித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கட்சியின் 25வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி உள்பட கட்சியின் பொதுகுழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதாவது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மதவாத சக்திகளையும், அவர்களுடன் கூட்டணி அமைத்தவர்களையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிளவுபடுத்தும் சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிப்பதாகவும் பாஜகவை மறைமுகமாக விமர்சித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தின் புகலிடமான தமிழ்நாடு தொடர வேண்டும் எனவும் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5%லிருந்து 7% ஆக உயர்த்த வேண்டும். முதல் கட்டமாக 5% ஆக அதிகரிக்கவும், தற்போதைய 3.5% ஒதுக்கீட்டின் பலன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, வரும் சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது. தற்போது தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஏழு இஸ்லாமிய எம்.எல்.ஏ.க்கள் (வெறும் 3%) மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து இந்த கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications