வெறும் 30 யூனிட்டுக்கு 141 ரூபாயா? விஜய் சார் இதுதான் உங்கள் மாற்றமா.. ஈரோடு இளைஞருக்கு 'இபி' பதில்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: "முதல்வர் விஜய் சார் 200 யூனிட் ஃப்ரீன்னு சொன்னீங்க.. அப்படி பார்த்தா வெறும் 30 யூனிட்டுக்கு 141 ரூபாயா? இதுதான் உங்கள் மாற்றமா.. இதுக்கு பேரு மாற்றம் இல்லை.. பொய் பித்தலாட்டம்.. உங்கள நம்பி ஓட்டு போட்டவங்க வயித்துல அடிக்காதீங்க சிஎம் சார்" என்று ஈரோட்டைச் சேர்ந்தவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் 200 யூனிட் மின்சாரம் இலவசம் தான் என்றும், அதற்கு அடுத்த 31 யூனிட்டிற்கு கட்டணம் 141 ரூபாய் தான் என்றும் கூறியுள்ளது. அது எப்படி சார் 31 யூனிட் 141 ரூபாய் என்று கேட்பார்கள் பலர். அவர்களுக்குத்தான் இந்த விளக்கம்.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தது. இந்த அரசு வந்ததும் அறிவித்தது 200 யூனிட் இலவசம் என்பது தான். 200 யூனிட் இலவசம் என்றால் அதற்கு மேல் வரும் யூனிட்டிற்கு முதல் 100 யூனிட்டிற்கு நிகரான கட்டணம் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை.. அதேபோல் மின் கட்டணம் என்பது அரசு அதிகமாக்கியதா என்றால், அதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் கடந்த 2022ம் ஆண்டில் இருந்த மின் கட்டணம் அதிமாகியது. அப்போது 200 முதல் 400 யூனிட் வரை என்பது 4.50 ரூபாய் இருந்தது.

Rs 141 for just 30 units TN EB responds to a youth from Erode who tagged CM Vijay

அதன்பிறகு படிப்படியாக அதிகரித்து 4.70 ரூபாய் ஆக இப்போது இருக்கிறது. இதன் படி பார்த்தால், 200 யூனிட் வரை இலவசம் என்றாலும், 200 முதல் 400 யூனிட் வரை மின் கட்டணம் என்பது 4.70 ஆக உள்ளது. உங்களுக்கு அதன்பிறகு 100 யூனிட் ஓடினாலே 470 ருபாய் மின் கட்டணம் வந்துவிடும். உங்களுக்கு 400 யூனிட் ஓடினால் 940 ரூபாய் வரை கட்டணம் வந்துவிடும்.. 500 யூனிட் வரை ஓடினால், 1410 ரூபாய் ஆக வந்துவிடும். சற்றே இந்த கட்டணம் மாறுபடலாம். ஆனால் 501 என்றாலும் உங்கள் மின் கட்டணம் அடியோடு மாறும்.உங்களுக்கு 100 யூனிட்டிற்கு மேல் உள்ள 100 முதல் 200 யூனிட் என்பது இலவசமாக இருக்காது. உங்கள் மின் கட்டணம் 2000த்தை தாண்டிவிடும். குறைந்தது 1000 ரூபாய் அளவிற்கு கட்டணம் அதிகரித்துவிடும். இதற்கு தான் பலரும் சரியான நேரத்தில் மின் கணக்கீடு எடுத்தால் 1000 ரூபாய் மின் கட்டணம் தங்களுக்கு குறைவாக வந்திருக்கும் என்று அரசை சாடுகிறார்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம். முதல்வர் விஜய் சார் 200 யூனிட் ஃப்ரீன்னு சொன்னீங்க.. அப்படி பார்த்தா வெறும் 30 யூனிட்டுக்கு 141 ரூபாயா? இதுதான் உங்க மாற்றமா என்று கேள்வி எழுப்பிய இளைஞருக்கு மின்சார வாரியம் தந்துள்ள பதிலை பார்ப்போம். " ஈரோடு கிழக்குப் பிரிவில் உள்ள தங்களது மின் இணைப்பு எண் 004-004-1446 தொடர்பாக, மின்கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து ஆய்வு செய்தபோது, 08.08.2026 அன்று 4,444 யூனிட்டாகவும், 10.10.2026 அன்று 4,674 யூனிட்டாகவும் மின்மீட்டர் அளவீடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டு மாதங்களுக்கான மொத்த மின்நுகர்வு 230 யூனிட்டுகளாகும். இதில், முதல் 100 யூனிட்டுகளுக்கும் அடுத்த 100 யூனிட்டுகளுக்கும் கட்டணம் கிடையாது. மீதமுள்ள 30 யூனிட்டுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.70 வீதம் கணக்கிட்டு, மொத்தம் ரூ.141/- மின்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்களது மின்நுகர்வின் அடிப்படையிலேயே கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை 2022க்கு முன்பு இருந்த சிஸ்டம் படி என்றால்,மின்கட்டணம் இவருக்கு எவ்வளவு வந்திக்கும் தெரியுமா? 2022-க்கு முன்பு 100 யூனிட் இலவசம் என்றே இருந்தது. 230 யூனிட்டுகளுக்கு ரூ.390 செலுத்த வேண்டிய நிலை 2022ம் ஆண்டு இருந்தது. தற்போது 200 யூனிட் இலவசம் என்பதால் ரூ.141 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஈரோடு இளைஞர் வீட்டில் 230 யூனிட் விஷயத்தின் படி பார்த்தால், ரூ.249 லாபம் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+