ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அய்யோ.. கை, கால் கட்டப்பட்டு.. புதைகுழியில் இருந்து மேலெழுந்து வந்த சடலம்.. அலறியடித்து ஓடிய மக்கள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், புதைக்கப்பட்ட சடலம் மேலெழுந்தது

Google Oneindia Tamil News

ஈரோடு: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலம் மேலெழுந்து வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

மேலும், ஈரோடு நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. கடந்த வாரம், ஈரோடு-சென்னிமலை ரோட்டில் உள்ள சேனாதிபதிபாளையம் பகுதியில் உள்ள ஓடையில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள சுமார் 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

பொங்கி வரும் காவிரி..கரையோர கிராமங்களில் சூழ்ந்த வெள்ளம்..மூழ்கிய பாலங்கள்..அம்மா மண்டபம் மூடல் பொங்கி வரும் காவிரி..கரையோர கிராமங்களில் சூழ்ந்த வெள்ளம்..மூழ்கிய பாலங்கள்..அம்மா மண்டபம் மூடல்

 குபுகுபு வெள்ளம்

குபுகுபு வெள்ளம்

இதேபோல, அதே பகுதியில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள 25 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து, பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி மேடான பகுதிகளில் தஞ்சமடைந்தனர்.. மேலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1.75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரி ஆற்றில் கரைகளை தொட்டவாறு காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது..

துர்நாற்றம்

துர்நாற்றம்

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.. இந்த வெள்ளப்பெருக்கு தற்போது வடிந்து வருகிறது.. எனினும், வெள்ளப்பெருக்கு காரணமாக இடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம் மேலெழுந்துவந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓடினார்கள்.. பாசூர் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது.. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றமும் வீச ஆரம்பித்தது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் சொல்லவும் அவர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை மேற்கொண்டனர்..

முள்ளுசெடிகள்

முள்ளுசெடிகள்

அப்போதுதான், ஒரு மாதத்துக்கு முன்பு, பாசூர் அருகே உள்ள செங்கோடையம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் இறந்துபோனது தெரியவந்தது.. இவருக்கு 70 வயதாகிறது.. இவரது உறவினர்கள், இவரை முறைப்படி அடக்கமும் செய்துள்ளனர். இந்த சமயத்தில்தான், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மண் அரிப்பு காரணமாக, துரைசாமி சடலம் மேலே வந்துவிட்டது தெரியவந்தது.. ஆற்றில் சடலம் அடித்து செல்லப்பட்டதுடன், அங்குள்ள ஒரு முட்புதரில் சடலம் சிக்கி கொண்டுள்ளது.. இத்தனை நாளும் தண்ணீர் ஓடிக்கொண்டேயிருந்ததால், சடலம் சிக்கியிருப்பது தெரியவில்லை..

 2வது அடக்கம்

2வது அடக்கம்

தற்போது தண்ணீர் வற்றியுள்ள நிலையில், சடலம் குப்பென நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிட்டது.. கை., கால்கள் கட்டப்பட்ட நிலையில், புதைகுழியில் இருந்து துரைசாமி மிதந்துவந்து, முட்புதருக்குள் சிக்கி கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.. இதற்கு பிறகு மறுபடியும், துரைசாமி குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் கொடுத்து, துரைசாமி மகன் உதயகுமாரிடம் சடலத்தை ஒப்படைத்தனர். பிறகு 2வது முறையாக துரைசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

English summary
Shocking Incident: male Dead body floated in the River Cauvery and what happened in Erode
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X