ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இதோ டேட்டா பாருங்க".. அண்ணாமலைக்கு எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. வேலையை காட்டிய ஓபிஎஸ்.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக இன்னும் இறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி ஆதரவு அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையிடம் பேசியது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதமே உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் தேர்தல் களம் சூடாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்காக திமுக கூட்டணி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்

பிரச்சாரம்

பிரச்சாரம்

திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறக்கப்பட்டு உள்ளார். இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் , தேர்தல் பணிகளை வகுக்காகவும் பெரிய டீம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதற்காக அமைச்சர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவையும் திமுக நியமனம் செய்துள்ளது. கே.என். நேரு தலைமையில்தான் இங்கே தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. எஸ். முத்துசாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், அர. சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், வி. செந்தில்பாலாஜி, ஆவடி சா.மு. நாசர், கயல்விழி செல்வராஜ், ஆகியோரும் இங்கே தேர்தல் பணிகளை செய்ய தொடங்கி உள்ளனர்

அதிமுக

அதிமுக

இன்னொரு பக்கம் அதிமுகவில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பாக அதிமுக அணி வேட்பாளர் களமிறக்கப்பட உள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக இந்த முறை அதிமுகவே போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனு வழங்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். இன்று முதல் வரும் ஜனவரி 26 வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

அதேபோல் ஓ பன்னீர்செல்வம் சார்பாக அவரது ஆதரவாளரும் களமிறக்கப்பட உள்ளார். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம், என்றுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக மட்டும்தான் இன்னும் இறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி ஆதரவு அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையிடம் பேசியது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது.

சந்திப்பு

சந்திப்பு

சமீபத்தில் அண்ணாமலையை பாஜக அலுவலகத்தில் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் கேபி முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் சென்று சந்தித்தனர். அதில் எடப்பாடி கொடுத்த மெசேஜ் ஒன்றை அண்ணாமலையிடம் இவர்கள் பகிர்ந்து உள்ளனர். அதில், ஈரோடு கிழக்கில் ஓ பன்னீர்செல்வத்திற்கு வாக்கு வங்கியே இல்லை. அவர் வீம்பிற்கு நிற்கிறார். புள்ளிவிவரம் படி அதிமுகவில் எங்களுக்கு மட்டுமே ஆதரவு இருக்கிறது. அதற்கான டேட்டா இதோ பாருங்கள். எங்களுக்குதான் திமுக கூட்டணிக்கு இணையான வாக்கு வங்கி இருக்கிறது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஓபிஎஸ் சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று இங்கே நிற்கிறார். நாங்கள் இங்கே நிற்பது உறுதி. அதை தெரிவிக்கவே இங்கே வந்தோம். நீங்கள் போட்டியிட விரும்பினால் போட்டியிடலாம். ஆனால் அது திமுகவிற்குத்தான் லாபமாக முடியும். மற்றபடி இதற்கும் லோக்சபா தேர்தலுக்கும் தொடர்பு இல்லை, என்று பாஜகவிடம் எடப்பாடி தரப்பினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே பாஜக என்ன நிலைப்பாடு எடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறதாம். பாஜகவில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் இதில் நிலவி வருகிறதாம். அதில் சிலர், பாஜக இப்போதுதான் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை பெற்று வருகிறது. மக்கள் நம்மை திரும்பி பார்க்க தொடங்கி உள்ளனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இப்போது இடைத்தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை இழந்து, வாக்கு வங்கியும் குறைந்தால், தோல்வி அடைந்தால் அது பெரிய சர்ச்சையாகும். என்று எச்சரித்து உள்ளனராம். அதே சமயம் இன்னும் சிலரோ, இங்கே நாம் வெற்றிபெறவில்லை என்றாலும் லோக்சபா தேர்தலுக்கு நல்ல முன்னோட்டமாக இருக்கும். இந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கூட நல்ல வாக்கு சதவிகிதத்தை எடுத்தாலே அது பாஜகவிற்கு பெரிய பலமாக இருக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு இது கூடுதல் பவரை கொடுக்கும். தோல்வி அடைந்தாலும் கூட பாஜகவிற்கு ஒரு வித நம்பிக்கையை இது கொடுக்கும், என்று கூறி வருகிறார்களாம்.

English summary
This is the real data: AIADMK Edappadi Palanisamy message to BJP Annamalai ahead of Erode East By-Election?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X