"நரகத்தின் வாசல்".. பூமியில் ஏற்பட்ட பெரிய குழி.. 50 வருடமாக விடாது எரியும் தீ -எங்கு? என்ன நடந்தது?
டார்வாசா: துர்க்மெனிஸ்தான் நாட்டில் நரகத்தின் வாயில் என்று அழைக்கப்படும் பெரிய குழியை மொத்தமாக மூட அந்நாட்டு அரசு முயன்று வருகிறது.
Recommended Video
மத்திய ஆசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு மேலே இருக்கும் சிறிய நாடுதான் துர்க்மெனிஸ்தான். எண்ணெய் வளம் நிரம்பிய இந்த நாட்டில் நிறைய மீத்தேன் வாயு கூடங்கள் உள்ளன. இங்கே பூமிக்கு கீழே அதிக அளவு எரிபொருள் உள்ளது.
இதனால் நாட்டில் ஆங்காங்கே மீத்தேன் எடுக்கும் கூடங்களும் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் துர்க்மெனிஸ்தான் நாட்டில் பூமியில் காணப்படும் பெரிய குழியும், அங்கு 50 வருடமாக விடாமல் எரியும் தீயும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்..

துர்க்மெனிஸ்தான்
துர்க்மெனிஸ்தான் நாட்டில் இருக்கும் டார்வாசா என்ற கிராமத்தில் இந்த பெரிய குழி உள்ளது. இதை அந்த நாட்டு மக்கள் நரகத்தின் வாயில் என்று அழைக்கிறார்கள். இது மொத்தம் 70 மீட்டர் சுற்றளவு கொண்ட பெரிய குழி ஆகும். 66 அடி ஆழம் கொண்ட குழி ஆகும். இதை நரகத்தின் வாயில் என்று அழைப்பதற்கு நிறைய காரணம் உள்ளது. கடந்த 1970ல் இருந்து இந்த குழி விடாமல் எரிந்து கொண்டு இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

நரகத்தின் வாயில்
ஆம், இங்கு 1971ல் சோவியத் யூனியன் மூலம் மிகப்பெரிய எண்ணெய் கிணறு அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. இதற்காக பெரிய ரிக் அமைக்கப்பட்டு கிணறு அமைக்கும் பணிகள் நடந்தன. ஆனால் 60 அடி ஆழம் தோண்டிய நிலையில் திடீரென அஸ்திவாரம் இடிந்து ரிக் கீழே விழுந்தது. பெரிய துளையாக இது மாறியது. சோதனை செய்து பார்த்ததில் அந்த குழியில் இருந்து மீத்தேன் வாயு வெளியேற தொடங்கி உள்ளது. அதிக அழுத்தத்தில் வேகமாக மீத்தேன் வெளியேறி உள்ளது.

மீத்தேன்
இதனால் அருகாமையில் இருக்கும் ஊர்களுக்கு மீத்தேன் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது காற்றில் கலந்து ஊருக்குள் எங்காவது தீ பற்றினால் ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த குழியை தீ வைக்க முடிவு செய்தனர். தீ வைத்தால் அங்கு மீத்தேன் வெளியேறும் போதே எரிந்து விடும். இதனால் ஊருக்குள் மீத்தேன் பரவாது என்று கூறியுள்ளனர். இது மொத்தம் 2-3 வாரங்கள் எரியலாம் என்று கணித்துள்ளனர்.

Gatway to Hell
ஆனால் அப்போது அங்கு எரிய தொடங்கிய தீ தான் விடாமல் கடந்த 50 வருடமாக எரிந்து கொண்டு இருக்கிறது. ஆம் இத்தனை வருடமாக குழியில் இருந்து மீத்தேன் வெளியேறி வரும் நிலையில் தீ விடமால் எரிந்தபடி இருக்கிறது. பெரிய குழி முழுக்க தீ காணப்படுவதால் பார்க்கவே படங்களில் காட்டப்படும் நரகம் போல காட்சி அளிக்கிறது. நரகத்தில் பெரிய எண்ணெய் கிணறு எரிந்தால் எப்படி இருக்குமோ எப்படித்தான் இந்த குழி காட்சி அளிக்கிறது.

எண்ணெய் கிணறு
இந்த குழி காரணமாக அருகில் 100 கிமீ சுற்றளவில் இருக்கும் ஊர்கள் எல்லாம் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடுமையான புகை தினமும் வெளியேறி வருவதால் இங்கு மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் இது கொஞ்சம் நச்சு கலந்த காற்று என்பதால் மக்கள் பலருக்கு இதனால் பல்வேறு மூச்சு, சுவாச தொடர்பான நோய்களும் ஏற்பட்டுள்ளன. இதை மூட கடந்த 2010ல் இருந்து துர்க்மெனிஸ்தான் அரசு முயன்று வருகிறது.

நச்சு காற்று
ஆனால் தொடர்ந்து வெளியேறும் மீத்தேன் வாயு காரணமாக துர்க்மெனிஸ்தான் குழியை மூட அந்நாட்டு அரசால் முடியவில்லை. இங்கு வரும் நெருப்பால் அருகில் வாயு எடுக்கும் கிணறு எதையும் அமைக்கவும் முடியவில்லை. இந்த நிலையில் இந்த வருடமாவது எப்படியாவது அந்த நரகத்தின் வாயிலை அடைக்கும் திட்டத்தில் துர்க்மெனிஸ்தான் அரசு உள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்பங்களை அந்நாட்டு அரசு களமிறக்க உள்ளது.

துர்க்மெனிஸ்தான் நகரம்
மொத்தமாக பெரிய பாறைகள் வைத்து, மண் உதவியுடன் இந்த குழியை மொத்தமாக மூடும் திட்டத்தில் அரசு உள்ளது. கடந்த 2010ல் இதே முறையை முயன்று அந்நாட்டு அரசு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. எங்களின் மீத்தேன் வளம் வீணாகிறது. நாங்கள் பல கோடிகளை இழந்துவிட்டோம் என்று துர்க்மெனிஸ்தான் அரசு இந்த குழி குறித்து புலம்பி உள்ளது. இந்த குழியை சோவியத் உருவாக்கியதாக கூறப்பட்டாலும் தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்யா சில வருடங்களுக்கு முன் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications