குஜராத் தேர்தல்: பலே பிளான் போடும் பாஜக.. நகர்ப்புற தொகுதிகளுக்கு தனி ஸ்கெட்ச்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இதில் பலே பிளானுடன் பாஜக மாநிலத்தின் நகர்ப்பகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது.
குஜராத்தை பொறுத்தவரை பாஜகவின் கோட்டையாக உள்ளது. குறிப்பாக நகர்புறங்களில் அசைக்க முடியாத கட்சியாகவே உள்ளது.
நகர்புற தொகுதிகளை கணக்கிட்டு பார்த்தால் கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தலில் 46 தொகுதிகளில் 40 தொகுதிகளை வென்று இருந்தது.

வெற்றியை தீர்மானிப்பதில்
குஜராத்தில் நகரங்களை பொறுத்தவரை கட்சியின் சின்னத்தை பார்த்து மட்டுமே பொதுவாக வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். கிராமப்புறங்களில் அப்படி இருக்காது. போட்டியிடும் வேட்பாளர், வேட்பாளரின் சாதி, மதம் உள்ளிட்டவையும் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இதனால் நகரத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே பாஜக அசைக்க முடியாத சக்தியாக வலம் வருகிறது.

ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு அதிகரிப்பு
தொழில் மிகுந்த சூரத் மட்டும் இதில் சற்று விதி விலக்காக உள்ளது. ஏனெனில் இந்த தொகுதியில் தற்போது ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சி பாஜகவின் வெற்றி வாய்ப்புக்கு வேட்டு வைக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதைத்தவிர்த்து பிற நகர்ப்புற பகுதிகளில் பாஜக இம்முறை துணிச்சலான முடிவுகளை கையில் எடுத்துள்ளது.

அமைச்சருக்கு வாய்ப்பு மறுப்பு
கடந்த முறை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இருந்த தொகுதிகளில் கூட இந்த முறை புதுமுகங்களை பாஜக களம் இறக்கியுள்ளது. ராஜ்கோட்டில் உள்ள நான்கு தொகுதிகளிலும் பாஜக கடந்த முறை போட்டியிட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ராஜ்கோட் கிழக்கு தொகுதியில் போக்குவரத்து சுற்றுலா துறை அமைச்சராக இருக்கும் அரவிந்த் ரையானிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மூன்று இடங்கள் மட்டுமே சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு..
முன்னாள் மேயர் உதய் கங்கட் இந்த தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார். அதேபோல் தெற்கு தொகுதியில் கோவிந்த் படேலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வதோரா நகரில் உள்ள ஐந்து தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மூன்றிலுமே புது முகத்தைதான் களம் இறக்கியிருக்கிறது. அகமதாபாத்திலும் இதே பார்முலாவைத்தான் பாஜக கையில் எடுத்துள்ளது. 15 இடங்களில் 12 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் மூன்று இடங்கள் மட்டுமே சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

9 பேருக்கு மீண்டும் வாய்ப்பு
ஆனால் சூரத் நகரில் மட்டும் இதற்கு முரண்பாடாக பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. சூரத் நகரில் 11 சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 9 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சூரத் நகரில் ஆம் ஆத்மி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. ஆம் ஆத்மியின் போட்டியை சமாளிக்கும் வகையில் சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. சூரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 27 இடங்களில் வென்று இருந்தது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications