Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம் ஆத்மிக்கு தாவிய எம்.எல்.ஏ.. அதிர்ச்சியில் பாஜக.. பரபரக்கும் குஜராத் தேர்தல் களம்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் குஜராத் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில், மடார் தொகுதி எம்.எல்.ஏ திடீரென பாஜகவில் இருந்து விலகி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். இதனால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.

182- தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

குஜராத் தேர்தல் அறிவிப்பால் அங்கு தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கி விட்டது.

வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வேட்பாளர் பட்டியல் வெளியீடு

குஜராத்தில் இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் கடும் போட்டி கொடுக்கும் எனத்தெரிகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு வேட்பாளர் பட்டியலையும் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜக 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பல புதிய முகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மடார் தொகுதி எம்.எல்.ஏ

மடார் தொகுதி எம்.எல்.ஏ

ஏற்கனவே போட்டியிட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. போட்டியிட வாய்ப்பு கிடைக்காத எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில், குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள மதார் மாவட்டத்தை சேர்ந்த மடார் தொகுதி எம்.எல்.ஏ . கேசரிசின்ஹ் சோலங்கிக்கு போட்டியிட பாஜக அனுமதி மறுத்துவிட்டது.

பாஜகவுக்கு கடும் நெருக்கடி

பாஜகவுக்கு கடும் நெருக்கடி

இதனால், அதிருப்தி அடைந்த கேசரிசின்ஹ் சோலங்கி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மடார் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட கேசரிசின்ஹ் , ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து இருப்பது பாஜகவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கலாம் என்று தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில தலைவர் கோபால் இடாலியா, கேசரிசின்ஹ் சோலங்கி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து இருப்பதாக தனது ட்விட் பதிவில் தெரிவித்துள்ளார்.

நேர்மையான அரசாங்கத்தை அமைப்போம்

நேர்மையான அரசாங்கத்தை அமைப்போம்

இது தொடர்பாக இடாலியா தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- "கடின உழைப்பாளியும் எதற்கு அஞ்சாத தன்மையும் கொண்ட மடார் தொகுதி எம்.எல்.ஏ கேசரிசின்ஹ் சோலங்கி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கொண்டார். அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான அரசியலால் கவரப்பட்டு ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். அவரை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நாங்கள் ஒருங்கிணைந்து குஜராத்தில் நேர்மையான அரசாங்கத்தை அமைப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

வேட்பாளர் பட்டியலில்..

வேட்பாளர் பட்டியலில்..

பாரதிய ஜனதா கட்சி நேற்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் மடார் தொகுதியில் கல்பேஷ் பர்மர் என்ற புதுமுகத்திற்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த தொகுதியில் சோலங்கி 2014 மற்றும் 2017 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

பாஜக சீட் கொடுக்க மறுத்ததால்

பாஜக சீட் கொடுக்க மறுத்ததால்

அப்போது முதல் முறையாக போட்டியிட சோலன்கி 2017- ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது பாஜக சீட் கொடுக்க மறுத்ததால் கோபம் அடைந்த சோலன்கி ஆம் ஆத்மியில் இணைந்து இருக்கிறார். எனினும், ஆம் ஆத்மி சார்பில் இந்த தொகுதிக்கு ஏற்கனவே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+