ஓசூர் தொழிலதிபரிடமே வேலையை காட்டிய வணிக வரி துறை அலுவலர்! கடைசியில் எங்க வந்து விட்டுருக்கு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: ஜிஎஸ்டி தொகையை திரும்ப பெற விண்ணப்பித்த ஓசூர் தொழிலதிபரிடம் ரூ 1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித் துறையின் மாநில வரி அலுவலர் கலையரசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மூக்கண்டப்பள்ளி எம்.எம். நகரைச் சேர்ந்தவர் நம்பி (75). இவர் ஓசூர் ஜுஜுவாடி துர்கா நகரில் ஒரு தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனத்திற்கு வர வேண்டிய ரூ 10 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி தொகையை பெறுவதற்காக வணிகவரி துறைக்கு விண்ணப்பித்திருந்தார்.

hosur crime

இது தொடர்பாக ஓசூர் வணிக வரித் துறை அலுவலக மாநில வரி அலுவலர் கலையரசன், மொத்த தொகையில் 20 சதவீதத்தை லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. "அவ்வளவு தொகையெல்லாம் தர முடியாது சார்" என நம்பி கூறினாராம்.

பின்னர் "சரி கடைசியாக கேட்கிறேன் 10 சதவீதம் மட்டும் கொடுங்கள்" என கலையரசன் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் நம்பிக்கு, அந்த பணத்தையும் கொடுக்க விருப்பமில்லை என தெரிகிறது. நியாயமாக கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை பெற எதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டும் என நம்பி கருதியதாக தெரிகிறது.

இதனால் கலையரசனுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க விரும்பிய நம்பி, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். அவரிடம் ரசாயனம் தடவிய 1 லட்சம் ரூபாயை போலீஸார் கொடுத்து, கலையரசனிடம் கொடுக்கச் சொன்னார்களாம்.

அந்த பணத்துடன் வணிக வரித் துறை அலுவலகத்திற்கு சென்ற நம்பி, கலையரசனை சந்தித்து ரூ 1 லட்சம் பணத்தை கொடுத்தாராம். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸார் கலையரசனை கையும் களவுமாக பிடித்தனர்.

இதையடுத்து கலையரசனுக்கு சொந்த ஊரான சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் அவருடைய வீட்டில் நேற்று இரவு சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினராம்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் திருப்பூர் மாநகராட்சியில் சாக்கடை திட்ட பணிகளுக்கான அளவீட்டு புத்தகத்தை சான்றளித்து அதற்கான நிதியை விடுவிக்க ரூ 50 லட்சம் கேட்டதாக திருப்பூர் மாநகராட்சியின் உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கைது செய்தனர்.

ஜூலை மாதம் சென்னை மாநகராட்சி மண்டலம் 6, மண்டலம் 9 இல் லஞ்ச ஒழிப்புத் துறை, சிறப்பு குழுவினர் நடத்திய ஆய்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உதவி செயற்பொறியாளர் ஒருவரது வங்கிக் கணக்கில் ரூ 2.39 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது.

அது போல் சேலத்தில் மின்சார இணைப்பு வழங்க ரூ 10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் பட்டா மாற்றம் செய்ய முறையே ரூ 10 ஆயிரம், ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்றதாக நில அளவையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இது போல் தினமும் யாராவது ஒரு அரசு அதிகாரி லஞ்சம் பெற்றதாக புகாரின் பேரில் கைது செய்யப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+