For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேவ் தி சில்ட்ரன் : லட்சக்கணக்கான குழந்தைகளின் உயிர்களைக்காக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு

சென்னை: நாடு முழுக்க 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு காப்பாற்றிட உங்களால் முடிந்த உதவிகளை சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பிற்கு செய்திடுங்கள்!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்வாய் மாதோபூர் பகுதியை சேர்ந்தவர் நன்னி (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத்திற்கும் (32) திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகின்றன. இருவரும் தினக்கூலி வேலை பார்த்து வருகிறார்கள்.

கடந்த மே மாதம் இந்தியா முழுக்க கொரோனா கேஸ்கள் உச்சத்தில் இருந்த போது நன்னிக்கு குழந்தை பிறந்தது. இது அவருக்கு பிறந்த 6வது குழந்தை ஆகும். டோன்க் மாவட்டத்தில் இருந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் பிரசவ வலியோடு அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறப்பு நார்மல் டெலிவரிதான். ஆனால் குழந்தை சுவாச குழாய்களில் ஆம்னியோடிக் திரவம் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த திரவம்தான் கருவில் குழந்தைக்கும் கருப்பைக்கு இடையில் குஷன் போல செயல்படும். அதோடு தண்ணீர், திரவம், புரதங்களை கடத்தவும் இது உதவும். இந்த திரவம் மூச்சு குழாயில் சென்ற காரணத்தால் அந்த குலநதிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

How a Newborn in Rajasthan Received a Blessing of Life through O2 Concentrator Provided by Save the Children

அதேபோல் ஆம்னியோடிக் திரவம் குழந்தையின் நுரையீரலின் பகுதிகளில் படிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் குழந்தைக்கு மூச்சு விடுதல் பிரச்சனை மட்டுமின்றி நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல்நிலை மருத்துவர்களால் உடனடியாக சோதிக்கப்பட்டது.

பிரச்சனையை மேலும் பெரிதாக்கும் வகையில், அந்த குழந்தை பிறந்த பின் அழவும் இல்லை. பொதுவாக குழந்தை பிறந்ததும் கண்ணீர் விட வேண்டும். ஆனால் அந்த குழந்தை அழவில்லை. இதனால் உடனடியாக குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் அந்த குழந்தையை மருத்துவர்கள் அனுமதித்தனர். ஆக்சிஜன் குறைபாட்டால் அந்த குழந்தைக்கு அஸ்பெக்சியா பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் அந்த குழந்தைக்கு ஆக்சிஜன் சப்போர்ட் தேவைப்பட்டது. ஆனால் இந்தியாவில் அப்போது கொரோனா பாதிப்பு பரவலாக நிலவி வந்தது. கொரோனா காரணமாக மக்கள் ஆக்சிஜன் இன்றி அப்போது தவித்து வந்தனர். நாடு முழுக்கவே ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வந்தது. அந்த நேரத்தில் நன்னி மற்றும் அப்துல் ஆகியோருக்கு சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு மூலம் உதவி தேடி வந்தது.

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி வழங்கும் வகையில் சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு ப்ரோஜக்ட் விஸ்வாஸ் (Philips Foundation and Philips India அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது) என்ற திட்டத்தை உருவாக்கியது. இந்த சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு 5 லிட்டர் ஆக்சிஜன் கான்சன்டேட்டரை வழங்கி உதவியது. சரியான நேரத்தில் அந்த குழந்தைக்கு ஆக்சிஜன் கான்சன்டேட்டர் வழங்கப்பட்ட காரணத்தால் அந்த குழந்தை சரியான நேரத்தில் உயிர் காக்கப்பட்டது.

குழந்தைக்கு சரியான நேரத்தில் ஆக்சிஜன் கிடைத்த காரணத்தால் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. மே 17ம் தேதி இதனால் குழந்தை முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு உரிய நேரத்தில் உதவி செய்த காரணத்தால் அந்த குழந்தை காக்கப்பட்டது. அந்த குழந்தையின் பெற்றோர் இருவரும் இதனால் சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பிற்கு நன்றி தெரிவித்தனர்.

"உங்களால்தான் நான் சந்தோசமாக இருக்கிறேன்", என்று குழந்தையின் அப்பா அப்துல் சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.

"என்னுடைய குழந்தை கண்ணீர் விடவில்லை. மூச்சு விடவில்லை. என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. மருத்துவமனைக்கு உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. நிறைய மிஷினை இணைந்து ஆக்சிஜன் வழங்கி வந்தனர். நாங்கள் எங்கள் குழந்தையின் உயிரை காக்க வேண்டும் என்று கண்ணீர்விட்டுக்கொண்டு இருந்தோம்" என்று அப்துல் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மருத்துவமனையின் எஸ்என்சியு பிரிவு மருத்துவர் த்ரிலோக் சந்திர வர்மா, சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்புதான் சரியான நேரத்தில் ஆக்சிஜன் கொடுத்து உதவி செய்தனர்.

How a Newborn in Rajasthan Received a Blessing of Life through O2 Concentrator Provided by Save the Children

சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு மூலம் காப்பாற்றப்பட்டது நன்னியின் குழந்தை மட்டும் கிடையாது. 15 குழந்தைகள் வரை கொரோனா காலத்தில் சேவ் தி சில்ட்ரன் (Save the Children) மூலம் வழங்கப்பட்ட ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் உதவியால் காப்பாற்றப்பட்டனர். கொரோனா காலத்திற்கு முன்பு ஆக்சிஜன் வழங்குவது எளிதாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இப்போது அவ்வளவு எளிதாக ஆக்சிஜன் கிடைக்காது.

சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு வழங்கிய உதவிகள் காரணமாகவே அந்த குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது.அதேபோல் குழந்தை பிறப்பு, ஆக்சிஜன் தேவை, தூய்மை, வேக்சின் போடுவது, கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் குறித்த விழிப்புணர்வையும் சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு ஏற்படுத்தி வருகிறது.

சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பின் #ThinkOfTheChildren பிரச்சாரத்தில் இப்போதே இணையுங்கள் .

கொரோனா காரணமாக குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று அவர்களின் வாழ்க்கையை முடக்கி உள்ளது.நீங்கள் எங்களுடன் இணைந்து குழந்தைகளுக்கு உதவி செய்ய முடியும். மருத்துவம், கல்வி, ஆக்சிஜன், சுகாதாரமான உணவு, பாதுகாப்பு இன்றி கஷ்டப்படும் 1 மில்லியன் குழந்தைகளுக்கு நீங்கள் எங்கள் மூலம் உதவி செய்ய முடியும்.

#ThinkOfTheChildren பிரச்சாரத்தில் இப்போதே இணையுங்கள். எங்கள் மூலம் நீங்களும் குழந்தைளுக்கு உதவுங்கள். குழந்தைகளுக்கு உதவ ஆர்வம் உள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X