ஒழுங்கா வறுக்கக் கூட மாட்டியா? ஆமைக் கறியால் அப்செட்டான கணவன்! அடித்தே கொலை செய்யப்பட்ட மனைவி!
புவனேஷ்வர் : ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் அருகே ஆமைக்கறியை சரியாக வறுத்துப் பறிமாறவில்லை என்ற காரணத்துக்காக மனைவியை கணவன் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி அறிவிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாநிலங்களில் இவ்வகை சம்பவங்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றன.
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகளும் அசாம், ஒடிசா, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. குடும்ப வன்முறை எனப்படும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு ஆண்களால் அரங்கேற்றப்படும் கொடுமைகளும் சொல்லி மாளாது.

அதிர்ச்சி சம்பவம்
அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் தற்போது அரங்கேறி இருக்கும் சம்பவம் தான் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆமை கறி கருகிவிட்டது என்பதற்காக கணவனே மனைவியை கொடூரமாக அடித்து கொலை செய்திருக்கிறார். ஒடிசா மாநிலத்தில் சாம்பல்பூர் அருகே ரௌத்பாரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் பாடிங் என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தில் பெரும் தொகையை மது மற்றும் போதை பொருட்களுக்கு செலவிட்டு வந்த அவர் மனைவி சாவித்திரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆமைக் கறி வறுவல்
உறவினர்களிடம் சொல்லியும் அவரது அட்டூழியங்கள் குறையவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் மது போதையில் வீட்டுக்கு வந்த ரஞ்சன் தனது மனைவியிடம் ஆமைக்கரியை வறுத்து தரும்படி கூறியுள்ளார். இதை அடுத்து சாவித்திரி ஆமைக்கரியை சுத்தம் செய்து வறுத்து பரிமாறி இருக்கிறார். அப்போது ஆமைக்கறி வறுவல் ஏன் கருகிவிட்டது என ஆத்திரமடைந்த ரஞ்சன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் மது போதையில் இருந்த ரஞ்சன் மனைவியை கொடூரமாக அடித்து உள்ளார்.

கொடூர கொலை
இதில் சாவித்திரி மயங்கி விழுந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார் ரஞ்சன். காலையில் வந்து பார்த்தபோது சாவித்திரி தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிரிழந்தது தெரியவந்திருக்கிறது. இதை அடுத்து கொலையை மறைக்க திட்டமிட்ட ரஞ்சன் சாவித்திரியின் உடலை வீட்டில் பின்புறத்திலேயே புதைத்திருக்கிறார். மேலும் மனைவி கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டுக்குச் சென்றுள்ளதாக அருகில் வசிப்போர்களிடம் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் ரஞ்சனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சாவித்திரியின் தாயார் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதிரடி கைது
புகாரையடுத்து ரஞ்சனின் வீட்டுக்குச் சென்ற காவல் துறையினர் அவரை விசாரிக்கும் முற்பட்டபோது தப்பியோட முயன்றிருக்கிறார். இதை தொடர்ந்து அவரை பிடித்த காவலர்கள் விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்த நிலையில் ஆமைக்கறி வறுவலுக்காக தனது மனைவியை அடித்து கொன்றதாக ரஞ்சன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இவை அடுத்து வீட்டின் பின்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சாவித்திரியின் உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரஞ்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications