ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வணிகமயமான உலகில் இத்தனை பொறுமையா?.. எனக்கும் ஒன்று வேண்டும்.. ஆனந்த் மகிந்திரா ட்வீட்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் மரத்தினாலான டிரெட்மில் செய்த ஒரு நபரின் திறமையை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார்.

Recommended Video

    வணிகமயமான உலகில் இத்தனை பொறுமையா?.. எனக்கும் ஒன்று வேண்டும்.. ஆனந்த் மகிந்திரா ட்வீட்

    உடல் ஆரோக்கியமடைய நடைப்பயிற்சி அவசியமானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்றைய இயந்திர காலத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நேரமில்லை என்கிறார்கள். இப்படி நேரமில்லை என்றால் விட்டுவிட முடியுமா என்ன?

    இதற்காக தயாரிக்கப்படுவதுதான் டிரெட் மில். இவற்றின் விலை பல ஆயிரங்களாகும். இதை எல்லோராலும் வாங்க இயலாது. இந்த டிரட் மில் மருத்துவ பரிசோதனைக்கு உதவுகிறது. அதாவது ஒரு மனிதனின் இதயம் சீராக இயங்குகிறதா என்பதை காண உதவுகிறது.

    கோவை இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு சொந்த வீடு வழங்க முன்வந்த ஆனந்த் மகிந்திரா! கோவை இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு சொந்த வீடு வழங்க முன்வந்த ஆனந்த் மகிந்திரா!

    உடற்பயிற்சி கூடம்

    உடற்பயிற்சி கூடம்

    பெரும்பாலான உடற்பயிற்சிக் கூடங்களில் இந்த டிரெட்மில்லில்தான் மக்கள் தினமும் உடற்பயிற்சி செய்கிறார்கள். என்னதான் பெரிய பெரிய பூங்காக்களை உருவாக்கி அதில் நடைப்பயிற்சி, ஜாக்கிங்கிற்கான தனி பாதை வகுத்துக் கொடுத்தாலும், வேப்பை, புங்கை மரங்களின் காற்றை சுவாசிக்க ஏதுவாக மரங்களை நட்டிருந்தாலும் அதையெல்லாம் வேண்டாம் என்கிறார்கள் இளைய தலைமுறையினர்.

    கண்ணாடி அறை

    கண்ணாடி அறை

    கண்ணாடி அறையில் கலர் கலர் விளக்குகள் ஜொலிக்க பார்க்கவே ரிச் லுக்கில் இருக்கும் பயிற்சிக் கூடங்களில் பல ஆயிரங்களை செலவு செய்து உடல் பயிற்சி செய்கிறார்கள். இது பார்ப்பதற்கு ஆசை ஆசை என ஒரு பாடல் தொடங்கும். திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ற படத்தில்தான் இந்த பாடல்.

    பாடல்

    பாடல்

    அதில் ஒரு வரி வரும்- "தூக்கம் விற்றுதானே ஒரு கட்டில் வாங்க ஆசை, தூண்டில் விற்று தானே அட மீன்கள் வாங்க ஆசை..." இப்படியாக போகும். அது போல் இலவசமாக கிடைக்கும் வேப்பம், புங்கை காற்றை விட்டுவிட்டு பணம் கொடுத்து கண்ணாடி அறையில் உடற்பயிற்சி செய்கிறார்கள் என்ற விமர்சனங்கள் உண்டு.

    புதுமை

    புதுமை

    அது ஒரு புறம் இருந்தாலும் எப்போதுமே புதுமையை பாராட்டித்தான் ஆக வேண்டும். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் மரத்தினால் ஆன டிரெட்மில்லை செய்துள்ளாராம். இதை ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார். 66 வயது தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்.

    வித்தியாசம்

    வித்தியாசம்

    அதே நேரத்தில் அவரது கண்களில் வித்தியாசமாகவோ புதுமையாகவோ பட்டுவிட்டால் அதை பாராட்டுவதிலிருந்தும் அவர் தவற மாட்டார். அந்த வகையில் தெலுங்கானா நபரின் புதுமையான வித்தியாசமான முயற்சியை ஆனந்த் மகிந்திரா பாராட்டிள்ளார்.

    ஆனந்த் மகிந்திரா ட்வீட்

    ஆனந்த் மகிந்திரா ட்வீட்

    அவர் தனது ட்வீட்டில் கூறுகையில் வணிகமயமாகிவிட்ட இந்த உலகில் இப்படி ஒரு கருவியை செய்வதற்கு இந்த கலைஞருக்கு இத்தனை பொறுமை இருப்பதற்கு பாராட்டுகள். அதிலும் அந்த கருவியை கையால் செய்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. இது கைவினை திறன் மீதான அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முயற்சியையும் காட்டுகிறது. இது வெறும் டிரெட் மில் அல்ல, கலைப்பொருளாகும். எனக்கும் ஒன்று வேண்டும் என கேட்டுள்ளார். தெலுங்கானா நபரின் கலைத்திறனை கண்ட நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். பலர் டிரெட் மில் செய்யும் நிறுவனத்தின் டிவிட்டர் ஹேண்டிலில் டேக் செய்தும் வருகிறார்கள்.

    English summary
    Businessman Anand Mahindra praises man who made wooden treadmill.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X