சர்பிரஸை தரேனு சொல்லி கழுத்தை அறுத்தாரே ஆந்திரா புஷ்பா!.. விசாரணையில் திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நிச்சயிக்கப்பட்ட மணமகனின் கழுத்தை அறுத்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் திடுக் தகவல்களை தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் அனகா பள்ளியை சேர்ந்த பிஹெச்டி மாணவி புஷ்பாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இவர்களது திருமணம் வரும் மே 26 ஆம் தேதி நடைபெற தேதி குறிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் இருந்து திருமணத்தை முன்னிட்டு ஊர் திரும்பிய ராமகிருஷ்ணாவை நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி வைத்துக் கொண்டாடலாம் என்று மலைப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார் புஷ்பா.

பைக்கை நிறுத்த சொன்ன புஷ்பா

பைக்கை நிறுத்த சொன்ன புஷ்பா

அங்கு இருவரும் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வீட்டுக்கு திரும்பும் போது ஆள் இல்லாத இடத்திற்கு பைக்கை நிறுத்த சொன்ன புஷ்பா, ராமகிருஷ்ணாவிடம் நான் உனக்கு ஒரு சர்பிரைஸ் கிப்ட் வாங்கி வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

கிப்ட் தரேன்

கிப்ட் தரேன்

அந்த கிப்ட் வேண்டுமென்றால் நீ உன் கண்களை மூடு என புஷ்பா கூறினாராம். உடனே தனது துப்பட்டாவில் கண்களை கட்டுகிறேன் என கூறிய புஷ்பா, துப்பட்டாவை கொண்டு ராமகிருஷ்ணாவின் கண்களை கட்டியுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ராமகிருஷ்ணாவின் கழுத்தை அறுத்ததாக தெரிகிறது. இதனால் ராமகிருஷ்ணா வலியால் துடித்தார்.

புஷ்பா தப்பியோட்டம்

புஷ்பா தப்பியோட்டம்

இதையடுத்து அங்கிருந்து புஷ்பா தப்பியோடிவிட்டார். ராமகிருஷ்ணாவின் அலறல் சப்தத்தை கேட்ட அந்த பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து அவரை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ராமகிருஷ்ணா அனுமதிக்கப்பட்டார்.

ராமகிருஷ்ணாவிடம் விசாரணை

ராமகிருஷ்ணாவிடம் விசாரணை

அப்போது ராமகிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையில் புஷ்பா தனது கழுத்தை அறுத்ததை வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து புஷ்பாவை போலீஸார் கைது செய்தனர். ராமகிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்ள புஷ்பாவுக்கு விருப்பமில்லை என்றும் பெற்றோர் கட்டாயப்படுத்தி இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.

 புஷ்பாவிடம் விசாரணை

புஷ்பாவிடம் விசாரணை

இந்த நிலையில் புஷ்பாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிரம்ம குமாரிகள் சமாஜத்தில் இணைந்து துறவியாக வாழ நான் திட்டமிட்டிருந்தேன். எனவே எனக்கு திருமணம் செய்து கொள்வதில் இஷ்டமில்லை. என் பெற்றோர் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால் ராமகிருஷ்ணாவை கொலை செய்து விட்டால் என் பிரச்சினையிலிருந்து தப்பலாம் என நினைத்து திட்டம் போட்டு கழுத்தை அறுத்தேன் என புஷ்பா வாக்குமூலம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+