ஓட்டு போடலைனு தெரிஞ்சது..! புல்டோசரை வைத்து வீட்டை இடிப்போம்.. உ.பி. மக்களை மிரட்டிய பாஜக எம்எல்ஏ
ஹைதராபாத்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் அவர்களின் வீடுகளை கண்டுபிடித்து புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்குவோம் என தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே கடந்த 10 ஆம் தேதியும், 14 ஆம் தேதியும் இரு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன.
இந்த தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து விரட்ட சமாஜ்வாதி கட்சி சிறப்பாக வியூகம் வகுத்துள்ளதாக அரசியல் கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால் ஆட்சியை தக்க வைப்போம் என பாஜகவும் போராடி பிரச்சாரம் செய்துள்ளது.

பாஜக எம்எல்ஏ ராஜா சிங்
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஹைதராபாத்தின் கோஷாமஹார் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அதாவது உத்தரப்பிரதேச இரண்டாம் கட்ட தேர்தலின் போது அவர் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்க வேண்டும்.

யோகி ஆதித்யநாத்
அது நடக்காமல் யோகி ஆதித்யநாத்தின் எதிரிகள் யாரேனும் அதிக எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றிருந்தால், பாஜகவுக்கு ஓட்டு போடாதவர்களின் வீடுகளை தேடி பிரச்சினை வரும் என மிரட்டியுள்ளார். அதாவது இந்துக்கள் வந்து அதிக அளவிலான வாக்குகளை அளிக்க வேண்டும். யாராவது பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் நான் யோகி ஆதித்யநாத் ஆயிரக்கணக்கான ஜேசிபி இயந்திரங்களையும் புல்டோசர்களையும் வைத்துள்ளார்.

வாக்களிக்காதவர்கள்
அவற்றை கொண்டு பாஜகவுக்கு வாக்களிக்காத நபர்களின் வீடுகளை தேடி சென்று இடிப்போம் என அதிர்ச்சிகரமான சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் செயல் தலைவர் கல்வகுண்ட்லா தாரகா ராமாராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிஆர்எஸ் கண்டனம்
அவர் கூறுகையில் எம்எல்ஏ டி ராஜா சிங் பேசுவது காமெடியன் போல் உளளது. பாஜகவுக்கு வோட்டு போடாவிட்டால் உங்கள் வீடுகளை யோகி இடிப்பாராம். அதை இந்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏ சொல்கிறார். எத்தனை தரம் தாழ்ந்த கருத்துகளை இவர்கள் கூறுகிறார்கள் என பாருங்கள் என்றார்.

தேர்தல் ஆணையம்
அவர் கூறுகையில் எம்எல்ஏ டி ராஜா சிங் பேசுவது காமெடியன் போல் உள்ளது. பாஜகவுக்கு வோட்டு போடாவிட்டால் உங்கள் வீடுகளை யோகி இடிப்பாராம். அதை இந்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏ சொல்கிறார். எத்தனை தரம் தாழ்ந்த கருத்துகளை இவர்கள் கூறுகிறார்கள் என பாருங்கள் என்றார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications