4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன்? சைபராபாத் போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி
Recommended Video
ஹைதராபாத்: பெண் டாக்டர் பலாத்கார குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் போலீஸ் பதிலுக்கு சுட்டதாக, சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சஜ்ஜனார் இன்று பிற்பகல் அளித்த பேட்டியில் கூறியதை பாருங்கள்: கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது அனைவருக்குமே தெரியும். இதையடுத்து, காவல்துறை விசாரணையை ஆரம்பித்தோம். அறிவியல் ரீதியான ஆதாரங்கள் மற்றும் பிற ஆதாரங்களை நாங்கள் சேகரிப்போம்.
இந்த விசாரணை தொடர்பாக, 4 பேரை கைது செய்தோம். நான்கு பேருமே தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதையடுத்து கடந்த 30ம் தேதி நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகாலை
இதன்பிறகு அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினோம். அதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தினோம். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திற்கு 4 பேரையும் அழைத்து வந்தோம். இன்று காலை சுமார் 5.45 மணியளவில், கொலை நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்றோம். அங்கே பெண் மருத்துவரின் செல்போன் உள்ளிட்ட சில ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கொடுத்த தகவலை தொடர்ந்துதான் நாங்கள் அழைத்துச் சென்றோம்.

துப்பாக்கி
அப்போதுதான் திடீரென குற்றவாளிகள் 4 பேரும் திடீரென கற்களை எடுத்து காவல்துறையினர் மீது வீசினர். கம்புகளை எடுத்து அடித்தனர். காவல்துறையினரின் துப்பாக்கியை பிடுங்கி சுடத் தொடங்கினர். இருப்பினும் காவல்துறையினர் பொறுமையை கடைபிடித்து 4 பேரையும் சரணடையுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டனர். அதை அவர்கள் ஏற்கவில்லை என்பதால் வேறு வழியின்றி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நான்கு பேரும் கொல்லப்பட்டனர்.

போலீசார் காயம்
வெங்கடேஷ் என்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் இந்த தாக்குதலில் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவனைில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
|
குற்றவாளிகள்
கடந்த நான்கு நாட்களில், கொலையாளிகளின் டிஎன்ஏ உள்ளிட்ட பல்வேறு தடயங்களை சேகரித்து இவர்கள் தான் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்துள்ளோம். மேலும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும், இந்த குற்றவாளிகள் எந்த பெண்களையாவது பலாத்காரம் செய்து கொலை செய்திருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றோம். இவ்வாறு சஜ்ஜனார் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications