• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சமையல்கார பெண்ணிடமும்.. ஒருத்தரையும் விடலை.. மொத்தம் 10 பேர்.. ஆனால் வயசு 24 தான்.. ஷாக்!

|

ஹைதராபாத்: சமையல்காரி முதல் ஒருத்தரையும் விட்டுவிக்கவில்லை இந்த இளைஞர்.. ஒரு கொலையை மறைக்க 9 கொலையை செய்துள்ளார்.. இவருக்கு வயசு எவ்ளோ ஆகுதுன்னு தெரியுமா? வெறும் 24தான்!

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மசூத்.. இவரது மனைவி பெயர் நிஷா.. இவர்கள் 20 வருஷங்களாகவே வாரங்கல் பகுதியில் உள்ள ஒரு கோணிப்பை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.. இவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.

 Death sentence for 24 year old man convicted for killing 9 migrants in Warangal

இந்த குடும்பத்தினருக்கு 5 வருஷத்துக்கு முன்பு சஞ்சய் குமார் என்பவர் அறிமுகமானார்.. இந்நிலையில், நிஷாவின் அக்காவின் அக்கா மகள் ரபிகா என்பவர் பிழைப்பு தேடி அதே வாரங்கல்லுக்கு வந்தார்.. ரபிகா ஏற்கனவே கல்யாணமானவர்.. 16 வயசில் மகள், 2 மகன்கள் இருக்கிறார்கள்.. வாரங்கல் பகுதிக்கு வந்து கூலி வேலையை செய்ய ஆரம்பித்தார்.

அப்போது சஞ்சய் குமாரிடம் சமையல்காரியாகவும் வேலை பார்த்து அதன் மூலம் வருமானம் ஈட்டி பிழைத்து வந்தார். சமையல் செய்த பெண்ணுடன், சஞ்சய்-க்கு நெருக்கம் ஏற்பட்டுவிட்டது.. வயசுக்கு வந்த பெண், உட்பட 3 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதைகூட யோசித்து பார்க்காமல் ஒரே வீட்டடில் கள்ள ஜோடி குடும்பம் நடத்த ஆரம்பித்துள்ளது.

இதற்கு அடுத்தகட்டமாக, ரபிகாவின் 16 வயசு மகள் மீது சஞ்சய்க்கு கவனம் திரும்பியது.. அந்த பெண்ணையும் காதலித்து ஏமாற்ற தொடங்கினார்.. இது தெரிந்ததும் ரபிகா அதிர்ச்சி அடைந்துவிட்டார்.. காரணம், ரபிகாவை கல்யாணம் செய்து கொள்வதாக சஞ்சய் சொன்னாராம்.. இப்போது மகளை ஏமாற்றி பழகி கொண்டிருக்கவும், கொதித்து போய் சஞ்சயிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனால் எரிச்சல் அடைந்த சஞ்சய், ரபிகாவை கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தார்.. அதற்காக சொந்த ஊரான மேற்கு வங்கத்துக்கே போய் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி, கடந்த மார்ச் 7-ம் தேதி ரபிகாவை ஏமாற்றி ரயிலில் அழைத்து சென்றார்.. ரயில் சென்று கொண்டிருக்கும்போதே ரபிகாவுக்கு தூக்க

மாத்திரையை டீயில் கலந்து தந்தார்.. ரபிகா மயங்கி விழுந்ததும்,அவரை ஓடும் ரயிலில் இருந்தே தள்ளிவிட்டு கொன்றுவிட்டார்.. பிறகு அடுத்த ரயிலை பிடித்து கொண்டு வாராங்கல் வந்தும் சேர்ந்துவிட்டார்.

ஊர் திரும்பிய சஞ்சயிடம், ரபிகா எங்கே என்று நிஷா கேட்கவும், சொந்தக்காரர் வீட்டுக்கு அனுப்பியிருப்பதாக சஞ்சய் பதிலளித்தார்.. ஆனாலும் சந்தேகமடைந்த நிஷா போலீசில் சொல்ல போவதாக மிரட்டவும், சஞ்சய் பயந்து விட்டார். உடனே நிஷாவிடம், "ரபிகாவிடம் விரைவில் அழைத்து செல்கிறேன்" என்று சொல்லி,

நிஷாவின் வீட்டில் இருந்த 6 பேரையும் கொல்ல முடிவெடுத்தார்.. அதன்படி நிஷாவின் மகனுக்கு பிறந்த நாள் வந்தது.

மார்ச் 21-ம் தேதி நடந்த பிறந்த நாள் விழாவில், நிஷா குடும்பத்துக்கு கூல்டிரிங்ஸ்-ல் தூக்க மாத்திரை கலந்து தந்தார்.. அந்த பர்த்டே பார்ட்டியில் பீகார் மாநில தொழிலாளர்கள் 3 பேரும் பங்கேற்றிருந்தனர்.. சஞ்சய் தந்த கூல்டிரிங்ஸை அவர்கள் அனைவருமே குடித்து மயங்கி விழுந்தனர்.. பிறகு நடுராத்திரி அவர்கள் அனைவரின் சடலத்தையும் ஒவ்வொரு கோணிப்பையிலும் திணித்து கட்டி, எடுத்து கொண்டு போய் பக்கத்தில் இருந்த கிணற்றில் வீசிவிட்டார்.. தனி ஒருவனாகவே இத்தனை பேரின் சடலத்தையும் எடுத்து கொண்டு போய் கயிற்றில் கட்டி கிணற்றில் போட்டுள்ளார்.

இந்த விஷயம் இறுதியில் போலீசாருக்கு தெரிந்து, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோதுதான், சஞ்சய் சடலங்களை தூக்கி செல்வது பதிவாகி இருந்தது. அதற்கு பிறகு விசாரணை நடத்தியதில் அனைத்து உண்மைகளையும் தெரிவித்தார்.. இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை இதுநாள் வரைரயில் வாராங்கல் கோர்ட்டில் நடந்து வந்தது.

சாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..!

அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், இன்று சஞ்சய்க்கு தூக்கு தண்டனை தரப்பட்டுள்ளது.. வாரங்கல் கோர்ட் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.. கள்ளக்காதலுக்காக, முறையற்ற காதலுக்காக, ஒரு கொலையை செய்து, அந்த கொலையை மறைக்க 9 கொலைகள் என மொத்தம் 10 பேரை கொன்ற 24 வயது இளைஞரின் இந்த பகீர் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 
 
 
English summary
Death sentence for 24 year old man convicted for killing 9 migrants in Warangal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X