வைர நெக்லஸ் போட்டுகிட்டு மின்னுறாங்களே பவித்ரா லோகேஷ்! அது யாருடையது? என் மாமியாருது! நரேஷ் மனைவி
ஹைதராபாத்: நடிகை பவித்ரா லோகேஷ் அணிந்திருக்கும் வைர நெக்லஸ் எனது மாமியாருடையது என நடிகர் நரேஷ் பாபுவின் மனைவி ரம்யா ரகுபதி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நரேஷ் பாபு (60). இவரது தம்பி மகேஷ் பாபு. இவரும் முன்னணி நடிகரே. நரேஷ் பாபு நடிகர் கிருஷ்ணாவின் முதல் மனைவியான விஜய நிர்மலாவுக்கு பிறந்தவர்.
இதனால் தனது தாய்க்கு பெருமை சேர்க்கும் விதமாக தனது பெயரை விஜய நரேஷ் மாற்றியுள்ளார். இவருக்கு டான்ஸ் மாஸ்டர், ரேகா சாஸ்திரி, ரம்யா ரகுபதி ஆகிய 3 மனைவிகள் உள்ளனர்.

இரு மனைவிகள்
இந்த நிலையில் முதல் இரு மனைவிகளை இவர் விவாகரத்து செய்துவிட்டார். இந்த நிலையில் 60 வயதில் இவருக்கு கன்னட நடிகை பவித்ரா லோகேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் தனிமையில் தங்குவது, அவரது அபார்ட்மென்டே கதி என கிடப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. பவித்ராவுக்கும் இரு கணவர்கள். இருவருடனும் விவாகரத்து ஆகியுள்ளது.

3ஆவது மனைவி
பவித்ராவுடனான காதல் விவகாரம் 3-ஆவது மனைவி ரம்யா ரகுபதிக்கு தெரியவரவே அவர் பிரச்சினையை கிளப்பியுள்ளார். இதனால் அவரை விவாகரத்து செய்ய நரேஷ் மனு தாக்கல் செய்துள்ளாராம். இந்த நிலையில் நரேஷும் பவித்ராவும் மைசூருவில் ஒரு ஹோட்டலுக்கு இரவு சென்று ரூம் போட்டுள்ளனர்.

ஹோட்டல் அறை
இதையறிந்த ரம்யா அந்த ஹோட்டல் அறைக்கு போய் கதவை தட்டியுள்ளார். நரேஷ் திறக்காமல் விடிய விடிய ஹோட்டல் அறையில் பவித்ராவுடன் இருந்துள்ளார். இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தின் புகாரின் பேரில் போலீஸார் வந்து கதவை திறக்க வைத்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
Recommended Video

விரைவில் திருமணம்
இந்த நிலையில் நரேஷ், பவித்ராவை விரைவில் திருமணம் செய்ய போவதாக தெரிவித்துள்ளார். ஆனால் இவர்களுக்கு ஏற்கெனவே ரகசிய திருமணம் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ரம்யா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் பவித்ரா லோகேஷ் அணிந்திருந்த வைர நெக்லஸ் என் மாமியாருடையது (நரேஷின் அம்மா). பவித்ராவின் பிறந்த நாளின் போதும் என் கணவர்தான் அவருக்கு நகைகளை வாங்கித் தருவார். அந்த நகைகளைத்தான் பவித்ரா அணிந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications