மாடு மேய்க்கும் பெண்ணால் "மிரண்ட" கேசிஆர்.. தெலுங்கானாவை அதிர செய்த பரேலக்கா.. திரும்புகிறது வரலாறு
ஹைதராபாத்: அந்த வேட்பாளர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில், பேங்க் அக்கவுண்ட் வெறும் ரூ.1,500 என்பதை அறிந்து அதிர்ந்துபோனார்கள் அதிகாரிகள்.. யார் அந்த வேட்பாளர் தெரியுமா? இவரை பற்றிதான் தெலுங்கானா முழுக்க பேச்சா இருக்கிறது.
ஸ்ரீஷா என்பது அந்த பெண் வேட்பாளரின் பெயர்.. 25 வயது பிகாம் பட்டதாரி.. சந்திரசேகர ராவி பிஆர்எஸ், மற்றும் காங்கிரஸ், பாஜக என்ற பிரம்மாண்டமான தேசிய கட்சிகளுக்கு நடுவுல் புயலென நுழைந்து, வேட்பாளராக அறிமுகமாகி, மொத்த தெலுங்கானாவையும் தன்பக்கம் திரும்ப செய்துள்ளார் ஸ்ரீஷா.

ஸ்ரீஷா: தொகுதி மக்கள் இவரை "பரேலக்கா" அதாவது மாடு மேய்க்கும் பெண் என்று செல்லமாக அழைக்கிறார்கள்.. நாகர்கர்னூல் மாவட்டம் கொல்லப்பூர் தொகுதியில் இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார் இந்த ஸ்ரீஷா.
அரசியல் சாதிக்க வேண்டும் என்ற ஆசையோ, பணத்தை மூட்டை மூட்டையாக சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசையோ இவருக்கு இல்லை.. தேர்தலில் இவ போட்டியிட வைக்கும்படியான சூழலை உருவாக்கியிருப்பது, 10 வருடம் மாநிலத்தை ஆண்ட கேசிஆர்தான்.
குடிகார அப்பா: வறுமையான பின்னணியில் பிறந்த இந்த பெண்ணின் அப்பா., ஒரு மொடா குடிகாரர்.. குடித்து குடித்தே குடும்பத்தை அழித்தவர்.. கொஞ்சநஞ்சமிருந்த நிலத்தையும் அடமானம் வைத்து குடித்தவர். அந்த நிலத்தை மீட்க, எத்தனையோ பேரின் காலில் விழுந்து கதறினார் ஸ்ரீஷா.. வேலை கிடைத்துவிட்டால், தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றிவிடலாம் என்ற ஒரே நம்பிக்கையுடன் போராடினார்..
வேலைக்காக எத்தனையோ இடங்களில் முயற்சித்துள்ளார்.. பல கம்பெனிகளுக்கு மனு போட்டுள்ளார்.. க்ரூப் I, க்ரூப் II, III மற்றும் IV போன்ற தேர்வுகளை எழுதியும் காத்திருந்தார். கடைசிவரை வேலை கிடைக்காத விரக்தியில், வேறு வழியின்றி மாடு மேய்க்க இறங்கிவிட்டார்.
மாடு மேய்ப்பு: கடந்த 2021-ம் ஆண்டு, ஒருநாள் தான் மாடுமேய்க்கும்போது, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டிருந்தார் ஸ்ரீஷா.. அதில், "நான் தான் பரேலக்கா.. எவ்வளவுதான் படிச்சி, டிகிரி வாங்கினாலும் நமக்கு இந்த தெலுங்கானா வேலை தராது. அதனாலதான் பிகாம் படிச்சிட்டு, என் அம்மா தந்த காசில், 4 எருமை மாடு வாங்கிட்டு, இப்படி மேய்ச்சிட்டு இருக்கேன். இன்னும் எம்பிஃல், பிஎச்டி படித்தவர்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பு கிடைக்காது" என்று பேசியிருந்தார்.
அப்போது ஸ்ரீஷா பேசிய இந்த வீடியோ, இணையத்தில் வைரலானது.. இளைஞர்களின் மத்தியில் புதுவித தாக்கத்தை ஏற்படுத்தியது.. இந்த ஒரு வீடியோ மட்டும் 9 லட்சம் சப்ஸ்கிரைப்பர்களை ஸ்ரீஷாவுக்கு பெற்று தந்திருக்கிறது.
வேலைவாய்ப்பு: இதோ, மாநிலத்தில் நிலவும் வேலைவாய்ப்பு பிரச்சனையையே மையமாக வைத்து, போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.. தெலுங்கானாவின் மிக இளமையான பெண் வேட்பாளரான ஷீலாவுக்கு, தெலுங்கானா பல்கலைக்கழக மாணவர்களே பிரச்சாரத்தில் குதித்தனர்.. இளவரசி பரேலக்கா என்று பெயர் ஸ்ரீஷாவுக்கு ஒரு பட்டப்பெயரை வைத்து, செல்லுமிடமெல்லாம் பாடல்களை பாடி, பொதுமக்களை கவர்ந்து வாக்குகளை கேட்டனர்.
காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதியின் சிட்டிங் எம்எல்ஏ பி. ஹர்ஷவர்தன் ரெட்டி ஆகியோருக்கு எதிராக போட்டியிடும் 14 பேரில் ஒருவராக இப்போது களமிறங்கி உள்ளார் ஸ்ரீஷா.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications