கழுத்தில் கிளட்ச் வயர்.. கழிவறை அருகே தெலங்கானா ஹரிணி.. 4 வருட காதல் படுத்திய பாடு.. பயங்கர ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானா நர்சிங் மாணவி ஹரிணி வழக்கில் 4 வருட காதல் இப்படி ஒரு பயங்கரமான திருப்பத்தை சந்திக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். காதலித்து வந்த இளைஞருடன் ஏற்பட்ட பிரச்சனை, ஹரிணியின் வீட்டுக்குள் நடந்த சம்பவம் என அடுத்தடுத்து பல கேள்விகள் எழுந்தன. ஆனால் போலீஸ் விசாரணையில் வெளிவந்த ஒரு விஷயம், இந்த வழக்கையே வேறு கோணத்துக்கு கொண்டு சென்றுவிட்டது..!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கண்ணபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயது ஹரிணி.

Harini Case Telangana Murder Nursing Student Murder

ஹரிணியின் அப்பா சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அவரது அம்மா ராஜேஸ்வரி கூலி வேலை செய்து, ஹரிணி மற்றும் அவரது தங்கையை படிக்க வைத்திருக்கிறார்.. கம்மம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் ஹரிணி.. சில தினங்களுக்கு முன்பு காலேஜ் லீவு என்பதால் சொந்த ஊருக்கு வந்திருந்தார்..

தெலங்கானா நர்சிங் மாணவி

செப்டம்பர் 22-ம் தேதி ஹரிணியின் அம்மா ராஜேஸ்வரி அருகிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது மதியம் ஹரிணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.. பிற்பகல் 4.30 மணியளவில் ராஜேஸ்வரி ஹரிணிக்கு போன் செய்தபோது, போனை யாரோ எடுத்திருக்கிறார்கள். ஆனால் மறுமுனையில் யாரும் பேசவில்லை. இதனால் சந்தேகப்பட்ட ராஜேஸ்வரி, உடனடியாக பக்கத்து வீட்டிலிருந்த ஒரு சிறுமியை அனுப்பி பார்த்து வர சொல்லி உள்ளார்.. அந்த சிறுமியும் ஹரிணி வீட்டுக்கு ஓடிவந்து பார்த்துவிட்டு, வீடு பூட்டியிருப்பதாக ராஜேஸ்வரியிடம் சொல்லியிருக்கிறார்.

மாலை 5 மணிக்கு ராஜேஸ்வரி வீட்டுக்கு அவசர அவசரமாக திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டின் பின்பக்கத்தில் பாத்ரூம் அருகே ஹரிணி சடலமாக கிடந்துள்ளார். அவரது வாயில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.. கழுத்தில் காயங்கள் இருந்துள்ளன.. இதையடுத்து தகவல் கிடைத்ததும் ஜூலூருபாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஹரிணியின் உடலை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணையையும் ஆரம்பித்தனர்.

ஹரிணியின் காதலன்

அதே கிராமத்தைச் சேர்ந்த பவன் குமார் என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் ஹரிணியின் அம்மா ராஜேஸ்வரி கூறினார்.. தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி பவன் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும், ஹரிணி அதற்கு சம்மதிக்கவில்லை என்றும், அதனால் இந்த கொலையை பவன்குமார் செய்திருக்ககூடும் என்றும் தன்னுடைய புகாரில் கூறியிருந்தார்.

எனவே இதுகுறித்து பவன் குமாரிடம் விசாரிக்க போலீசார் முயன்றனர். ஆனால், பவன் குமார் அதற்குள் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தையும் அதிகப்படுத்தியது..

ஹரிணியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

இந்த நேரத்தில்தான் ஹரிணியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், ஹரிணி இயற்கையாக உயிரிழக்கவில்லை, அவரது கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார்.. கழுத்தில் வயர் போன்ற பொருள் இறுக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன.. பாலியல் தாக்குதல் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை" என்று ரிப்போர்ட் வெளியானது.. இதையடுத்து முதலில் பதிவு செய்யப்பட்ட சந்தேக மரண வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

அதன்பிறகு தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு பவன்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.. அப்போது போலீசாரிடம் நடந்த விவரங்களை வாக்குமூலமாக பவன் குமார் கூறியிருக்கிறார்.

அதாவது ஹரிணியும், பவன்குமாரும் சுமார் 4 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள்.. திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளார்கள்.. ஆனால் 2 குடும்பங்களுக்கும் இடையே இருந்த பிரச்சனையால், இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இந்த நேரத்தில், பவன் குமாரின் நடத்தையும் வேறுவிதமாக மாற துவங்கியுள்ளது.. பவன் குமாரின் பழக்கவழக்கங்களை கண்டு அதிர்ச்சியடைந்த ஹரிணி, மெல்ல அவரிடமிருந்து விலக ஆரம்பித்துள்ளார்.. மேலும் தன்னுடைய சோஷியல் மீடியாவிலும் பவன் குமாரை பிளாக் செய்துள்ளார்..

பைக்கின் கிளட்ச் வயர்

இதனால் வேறு ஒரு இளைஞருடன் ஹரிணிக்கு தொடர்பில் இருப்பதாக பவனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.. இந்த ஆத்திரம் தாங்காமல்தான் ஹரிணியை கொல்ல முடிவெடுத்துள்ளார் பவன்குமார்.

செப்டம்பர் 22-ம் தேதி பிற்பகல் 3.20 மணியளவில் ஹரிணியின் அம்மா வீட்டை விட்டு வெளியே சென்றதை பவன் குமார் கவனித்துவிட்டு, வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஹரிணியை வற்புறுத்தியிருக்கிறார்.. ஆனால், ஹரிணி இதற்கு மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது..

இதனால் ஆவேசமாகி, கையோடு கொண்டு போயிருந்த பைக்கின் கிளட்ச் வயரால் ஹரிணியின் கழுத்தை இறுக்கியிருக்கிறார்.. இதில் ஹரிணி துடிதுடித்து இறந்ததுமே, அவரது உடலை கழிவறைக்குப் பின்னால் போட்டுவிட்டு, தான் கொண்டுவந்த பைக்கை, சிதாராமா திட்ட கால்வாய் அருகே புதர்களுக்குள் மறைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார் பவன் குமார்.

ஜெயிலில் அடைப்பு

விசாகப்பட்டினம், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் தலைமறைவாக சுற்றி விட்டு, சுமார் 9 நாட்களுக்குப் பிறகு பைக்கை எடுப்பதற்காக, மீண்டும் அதே பகுதிக்கு வந்திருக்கிறார்.. அப்போதுதான் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.. இவ்வளவும் பவன் குமார் வாக்குமூலமாய் தந்ததையடுத்து, அவரை இப்போது போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்..

ஹரிணியின் தாய் சந்தேகத்துடன் அளித்த புகார், அதைத்தொடர்ந்து வெளியான போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், பவன் குமாரின் பகீர் வாக்குமூலம் போன்றவை, ஹரிணி கொலை வழக்கை அதிர வைத்துள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+