Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெலுங்கானாவில் மகுடம் யாருக்கு! "பிஆர்எஸ் vs காங்கிரஸ்.." வெல்லப் போவது யார்! வெளியான பரபர சர்வே!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்தாண்டு இறுதியில் மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தென்மாநிலங்களைப் பொறுத்தவரைத் தெலுங்கானாவில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே நவ. 30ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. டிச. 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

 KCR BRS is to likely retain Telangana says India TV-CNX Opinion Poll

இதற்கிடையே தெலுங்கானா சட்டசபைத் தேர்தல் குறித்து இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.

தெலங்கானா வெல்வது யார்: தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 119 தொகுதிகள் இருக்கிறது. அதில் ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 60 இடங்களில் வெல்ல வேண்டும். தற்போது ஆட்சியில் இருக்கும் கேசிஆர் ஆட்சியைத் தக்க வைப்பார் என அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது அங்கே ஆட்சியில் இருக்கும் பிஆர்எஸ் கட்சிக்கு 70 இடங்கள் கிடைக்கும் என்று அந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. கடந்த 2018 பிஆர்எஸ் கட்சி 88 இடங்களில் வென்றிருந்தது. அதில் இருந்து சுமார் 18 இடங்களை இந்த முறை பிஆர்எஸ் இழக்கும் என்றே கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஆட்சியைப் பிடிக்கத் தேவையான இடங்களை பிஆர்எஸ் பெறும் என்றே இந்தியா டிவி கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் & பாஜக: மறுபுறம் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அவர்களால் 34 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் என்று இந்தியா டிவி சர்வே தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கடந்த 2028 தேர்தலில் 19 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் பாஜகவால் வெறும் 7 இடங்களை மட்டுமே பிடிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த முறை பாஜக வெறும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்று குறிப்பிடத்தக்கது.

அதேபோல அசாதுதீன் ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி கடந்த முறையைப் போலவே இந்த முறையும் ஏழு இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.. மற்ற கட்சிகளுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என்று இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய அந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.

எங்கே அதிக இடம்: பிராந்தியம் வாரியாக பார்க்கும் போது கிரேட்டர் ஹைதராபாத் பகுதியில் மொத்தம் 28 இடங்கள் உள்ளது. அதில் பிஆர்எஸ் 13 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மஜ்லீஸ் கட்சி 6 இடங்களிலும் காங்கிரஸ் ஐந்து இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜக இங்கே 3 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்து தெற்கு தெலுங்கானாவில் மொத்தம் 42 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே பிஆர்எஸ் கட்சி 30 இடங்களிலும் காங்கிரஸ் 12 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வட தெலுங்கானாவில் மொத்தம் 49 இடங்கள் இருக்கிறது. அங்கே பிஆர்எஸ் அதிகபட்சமாக 27 இடங்களிலும் காங்கிரஸ் 17 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பாஜக 4 இடங்களிலும் மற்ற கட்சிகள் ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் நமக்குத் துல்லியமான முடிவுகள் கிடைக்காது. அவை தேர்தல் முடிவுகளில் இருந்து வேறுபட்டே இருக்கும். இதை நாம் கடந்த காலங்களிலும் பார்த்துள்ளோம். இந்த சர்வே எந்தளவுக்குத் துல்லியமாக இருக்கும் என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+