தெலுங்கானாவில் அப்படியே ட்விஸ்ட்! காங்கிரசுக்கு பெரும் ஷாக்! டபுள் குஷியில் பாஜக! வெளியான புது சர்வே
ஹைதராபாத்: தெலுங்கானாவில் மொத்தம் 17 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், இந்த இடங்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து நியூஸ் 18 மெகா கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா கூட்டணிக்கு கடும் பின்னடைவு இருக்கும் என்று சர்வே முடிவுகள் கூறுகின்றன.
2024 லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. இதற்கிடையே, தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக ஊடகங்கள், சர்வே நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது நியூஸ் 18 - சி.என்.என். கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. மாநிலங்கள் வாரியாக எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்ற விபரங்களுடன் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் இன்று தெலுங்கானா தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து நியூஸ் 18 கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
பாஜகவுக்கு டபுள்: தெலுங்கானாவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், வரும் லோக்சபா தேர்தல் முடிவு இந்தியா கூட்டணிக்கு ஷாக் கொடுக்கும், விதமாக இருக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. அதாவது தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாம்.
கடந்த 2019 தேர்தலில் பாஜக 4 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில் வரும் தேர்தலில் இந்த எண்ணிக்கை அப்படியே டபுள் ஆகும் என்று நியூஸ் 18 கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி 6 இடங்களிலும் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாம்.
வாக்கு சதவீதம் எப்படி?: பிற கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றிக்கு வாய்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவிகிதம் அடிப்படையில் பார்த்தால் இந்தியா கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக்கு 34 சதவிகிதமும் பாஜகவிற்கு 28 சதவிகிதமும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கு 27 சதவிகிதமும் பிற கட்சிகளுக்கு 11 சதவிகித வாக்குகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications