லெக்பீஸ காணோம்.. கொதித்தெழுந்த பிரியாணி பிரியர்.. ஒரே ஒரு டிவீட்டில் அமைச்சரையே பதில் தர வெச்சுடாரு!
தனது பிரியாணியில் லெக்பீஸ் இல்லை என தெலுங்கானா அமைச்சரிடம் புகார் செய்துள்ளார் நெட்டிசன் ஒருவர்.
ஹைதராபாத்: தான் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லையென அமைச்சரிடம் புகார் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் தெலுங்கானாவை சேர்ந்த நபர் ஒருவர்.
பிரியாணியை பிடிக்காதவர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். அந்தளவுக்கு ஒரு பிரபலமான, பிடித்தமான உணவாகிவிட்டது பிரியாணி. ஒரு சாலையில் 10, 15 பிரியாணி கடைகள் திறக்கப்பட்டாலும், அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழியத்தான் செய்கிறது.
சிக்கன் தம் பிரியாணி, மட்டம் மண்டி பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி என பிரியாணியில் தான் எத்தனை விதங்கள் கிடைக்கின்றன. மூன்று வேளை பிரியாணி கொடுத்தாலும் மூக்குபிடிக்க சாப்பிடலாம் என சொல்லும் அளவுக்கு மவுசு பெருகிவிட்டது பிரியாணிக்கு.
கொரோனாவிற்கு சிக்கன் சாப்பிட்டால் நல்லது எனக் கூறினால்கூட, நம்மவர்கள் கவனம் உடனே சிக்கன் பிரியாணி பக்கம் தான் செல்லும். அந்தளவிற்கு பிரியாணிக்கு இங்கு ரசிகர்கள் அதிகம்.

ஆன்லைன் பிரியாணி
தெலுங்கானாவை சேர்ந்த அப்படிப்பட்ட ஒரு பிரியாணி பிரியர் சம்பவத்தன்று ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்திருக்கிறார். அதில் சிக்கன் லெக்பீஸ் வேண்டும் என்றும், கூடுதல் மசாலா வேண்டும் என்றும் அவர் ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு வந்த பிரியாணியில் அவை இரண்டுமே இல்லை என்பதை அறிந்து மிகவும் கொந்தளித்துவிட்டார்.

மிஸ்ஸான லெக்பீஸ்
இதையடுத்து அவர் அந்த பிரியாணியை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டு, "லெக்பீஸ் மற்றும் கூடுதல் மசாலா சேர்த்து சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தேன். ஆனால் அதில் இரண்டுமே இல்லை. இது தான் நீங்கள் மக்களுக்கு சேவை செய்யும் லட்சணமா", என கேட்டு, சொமேட்டோவையும், கூடவே தெலுங்கானா அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சரும், முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி. ராமா ராவையும் சேர்த்து டேக் செய்தார். இதைப்பார்த்த அனைவரும் அதிர்ந்து போய்விட்டனர்.

உள்ளாட்சித்துறை அமைச்சர்
இந்த டிவீட் அமைச்சரின் கவனத்திற்கும் சென்றது. டிவீட்டைப் பார்த்த அமைச்சர் கேடி ராமா ராவ், "இதில் என்னை ஏன் பிரதர் டேக் செய்தீர்கள்? நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?", என கூலாக பதில் டிவீட் செய்துள்ளார். அவரது இந்த ரியாக்ஷனை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.

பிரியாணியின் சக்தி
'அமைச்சரையே கேள்வி கேட்க தூண்டுவது தான் பிரியாணியின் சக்தி, 'நாடி நரம்பிலெல்லாம் பிரியாணியின் சுவை ஊறியவரால தான் இப்டி யோசிக்க முடியும்' என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அமைச்சர் பதில் அளித்த சற்று நேரத்தில் தான் பதிவிட்ட டிவீட்டை நீக்கிவிட்டார் சம்பந்தப்பட்ட நபர். இருந்தாலும் இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications