"ஆட்சி கவிழ்ப்பு!" இந்த 4 மாநிலங்கள் குறி.. சீக்ரெட்டாக காய் நகர்த்தும் பாஜக! கேசிஆர் பகீர் வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வராக உள்ள கேசி சந்திரசேகர ராவ், மத்திய பாஜக அரசு மீது சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார்.

தெலங்கானாவில் இப்போது கேசி சந்திரசேகர ராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அங்கு அடுத்தாண்டு இறுதியில் தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ் இருப்பு அங்கு இருக்கும் போதிலும், இப்போதைக்கு அங்கு வலுவான எதிர்க்கட்சி யாரும் இல்லை. அந்த இடத்தை பிடிக்கவே இப்போது பாஜக முயன்று வருகிறது.

தெலங்கானா

தெலங்கானா

இதனிடையே தனது ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாகச் சாடியுள்ள தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், பாஜக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயல்வதாகவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நீதித்துறை மற்றும் பகுத்தறிவு இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். கடந்த வாரம் தான் டிஆர்எஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க முயல்வதாக இடைத்தரகர்கள் என்று கூறி சிலர் கைது செய்யப்பட்டனர்.

 மொத்தம் 4 மாநிலங்கள்

மொத்தம் 4 மாநிலங்கள்

இதனிடையே மேலும் சில பரபர குற்றச்சாட்டுகளையும் அவர் சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த வாரம் எங்கள் 4 எம்எல்ஏக்களை அவர்கள் இழுக்க முயன்றனர். எனது அரசு மட்டுமின்றி மொத்தம் 4 மாநில அரசுகளைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. தெலங்கானா தவிர ராஜஸ்தான் டெல்லி மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநில அரசுகளைக் கவிழ்க்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

 உயிர்த் தியாகம்

உயிர்த் தியாகம்

இந்த மோசமான செயல்களுக்கு அவர்கள் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்.. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிடுவார் என நம்புகிறேன். நான் எனது உயிரைத் தியாகம் செய்யவும் கூட தயாராக இருக்கிறேன். ஆனால் என்ன நடந்தாலும் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்க மாட்டேன். இங்கு யாரும் 1000 ஆண்டுகள் வாழப் போவது இல்லை.

 எதில் கவனம் செலுத்த வேண்டும்

எதில் கவனம் செலுத்த வேண்டும்

நீங்கள் இரண்டு முறை பிரதமராக இருந்துவிட்டீர்கள். அதுவே அதிர்ஷ்டம் தான். ஆனால் நீங்களே வரலாற்றுப் பக்கங்களில் உங்கள் பெயரைச் சிதைக்கிறீர்கள். அரசைக் கவிழ்க்கும் இந்த ஜனநாயக விரோத செயல்களால் என்ன சாதிக்கப் போகிறது? இதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாகப் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பல்வேறு மனித வளர்ச்சிக் குறியீடுகளில் வீழ்ச்சியடைந்து வரும் இந்தியாவின் நிலை மேம்படுத்துவதில் கவனத்தைச் செலுத்துங்கள்.

வெட்கமே இல்லாமல்

வெட்கமே இல்லாமல்

அதுதான் இப்போது நாட்டிற்கும் இங்குள்ள மக்களுக்கும் தேவை. ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் பாருங்கள்.. கடந்த வாரம் கைது செய்யப்பட்ட தரகர்கள் கர்நாடகா, மகாராஷ்டிராவில் இதுபோன்ற செயல்களை எப்படிச் செய்தார்கள் என்பதை வெட்கமின்றி விவரிக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இப்படி 8 மாநிலங்களில் அரசு கவிழ்க்கப்பட்டன..

 அதிர வைப்பேன்

அதிர வைப்பேன்

இப்போது தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் அரசைக் கவிழ்க்க இதே செயல்முறை நடந்து வருகிறது. அவர்கள் எங்கள் எம்எல்ஏக்களை எப்படி அணுகினார்கள்.. என்ன செய்தார்கள் என்ற வீடியோக்களை நீதிபதிகள், அனைத்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புலனாய்வு அமைப்புகளுக்கு அனுப்பப்போகிறேன். இதன் மூலம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரிய வரும்" என்று அவர் தெரிவித்தார்.

 பரபர வீடியோ

பரபர வீடியோ

தெலங்கானா முதல்வர் வெளியிட்ட வீடியோக்களில் ஒன்றில், சிம்ஹயாஜி என்பவர் 4 டிஆர்எஸ் எம்எல்ஏக்கள் பாஜகவின் உயர்மட்ட அதிகாரியின் ஸ்கேனரில் இருப்பதால் கவலைப்பட வேண்டாம் என்று கூறுவது தெளிவாகத் தெரிகிறது. மேலும், எம்எல்ஏக்களுக்கு இரு ஆப்ஷன்கள் இருப்பதாகவும் ஒன்று பாஜகவுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.. அப்படியில்லை என்றால் அமலாக்கத் துறை கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனக் கூறுவது தெளிவாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+