Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெலுங்கானாவை புரட்டிப்போட்ட பிரணாய் குமார் ஆணவ கொலை.. அம்ருதாவின் அப்பா திடீர் தற்கொலை.. பகீர்!

தெலுங்கானாவை புரட்டிப்போட்ட பிரணாய் குமார் ஆணவ கொலைக்கு மூளையாக செயல்பட்ட தொழிலதிபர் மாருதி ராவ் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவை புரட்டிப்போட்ட பிரணாய் குமார் ஆணவ கொலைக்கு மூளையாக செயல்பட்ட தொழிலதிபர் மாருதி ராவ் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    பிரணாய் குமார் ஆணவ கொலை.. அம்ருதாவின் அப்பா திடீர் தற்கொலை

    தெலுங்கானாவை உலுக்கிய ஆணவ கொலை பலருக்கும் நினைவில் இருக்கலாம். 2018ல் நடந்த பிரணாய் குமார் ஆணவ படுகொலை இணையம் முழுக்க அப்போது பிரபலம் ஆனது. தெலுங்கானாவில் நடந்த இந்த படுகொலை இந்தியாவை உலுக்கிய படுகொலைகளில் ஒன்றாகும்.

    தெலுங்கானாவை சேர்ந்த பிரணாய் குமாரும், அம்ருதவர்ஷினியும் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள். அதன்பின் கல்லூரியும் ஒரே கல்லூரியில் சேர்ந்து உள்ளனர்.

    காதல் செய்தனர்

    காதல் செய்தனர்

    இந்த நிலையில் கல்லூரிக்கு வந்த பின் தான் அவர்கள் காதலிக்க தொடங்கி உள்ளனர். இதை வீட்டில் சொன்ன போது இரண்டு வீட்டிலும் ஒப்புக்கொள்ளவில்லை. அம்ருதவர்ஷினி ''ஓசி'' வகுப்பை சேர்ந்தவர், பிரணாய் குமார் பட்டியலின சாதியை சேர்ந்தவர். இதனால் பெண் வீட்டில் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

    திருமணம் செய்தனர்

    திருமணம் செய்தனர்

    இதனால் வீட்டை விட்டு வெளியேறி அம்ருதவர்ஷினியும் பிரணாய் குமாரும் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணம் நடந்தது கடந்த 2018 வருடம். இதையடுத்து கடந்த 2018 ஆகஸ்ட் மாதம், பிரணாய் குமாரின் வீட்டில் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். அதன் பின் இவர்கள் இருவரும் பிரணாய் குமார் வீட்டிலேயே சென்று தங்கி உள்ளனர். ஆனால் அம்ருதவர்ஷினி வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை.

    கொலை செய்தனர்

    கொலை செய்தனர்

    ஆனாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இவர்கள் வாழ்க்கை நகர்ந்துள்ளது. இந்த நிலையில்தான் அம்ருதவர்ஷினி கர்ப்பமாகி உள்ளார். இதனால், தெலுங்கனாவின் நல்கொண்டா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு வாராவாரம் மனைவி அம்ருதவர்ஷினியை அழைத்து சென்றுள்ளார் பிரணாய் குமார். இவர்கள் திருமணம் செய்த புகைப்படங்கள், அதற்கு எடுத்த வீடியோ எல்லாமும் இப்போதும் இவர்கள் பேஸ்புக் பக்கத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது. மிகவும் அழகான வாழ்க்கைக்கு இவர்கள் காத்திருந்திருக்கிறார்கள்.

    மிக கொடூரம்

    மிக கொடூரம்

    கடைசியாக 2018 செப்டம்பரில் நல்கொண்டா மருத்துவமனைக்கு செல்லும் முன் அம்ருதா, தனது கணவர் பிரணாய் உடன் சென்றார். மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது அம்ருதா பிரணாய் ஜோடியை பின்தொடர்ந்து வந்த சுபாஷ் சர்மா என்ற கூலிப்படை கொலையாளி, பிரணாயை பின்னிருந்து தாக்கி, கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். அம்ருதா கண் முன்னே இந்த கொலை நடந்தது. இந்த கொலையின் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அச்சம் ஊட்டியது.

    யார் தூண்டியது

    யார் தூண்டியது

    இந்த கொலையை செய்ய தூண்டியது அம்ருதாவின் அப்பா மருதி ராவ். இவர் தெலுங்கானாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர். நிறைய பிஸினஸ்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். கைராபாத் பகுதியில் உள்ள ஆர்யா வைஸ்யா பவன் ஹோட்டலுக்கு இவர் நேற்று சென்றுள்ளார்.

    தற்கொலை செய்து கொண்டார்

    தற்கொலை செய்து கொண்டார்

    நேற்று இரவே விஷம் குடித்தவர் உள்ளேயே தற்கொலை செய்து கொண்டார். இன்று மதியம்தான் அவரின் உடல் அறையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. தற்போது இவரின் உடல் போலீசால் கைப்பற்றுபட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. இவரது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இவருக்கு எதிரான வழக்கு நடந்து வரும் நிலையில் தீர்ப்புக்கு பயந்து இப்படி முடிவு எடுத்து இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. தெலுங்கானாவவை உலுக்கிய பிரணய் குமாரை கொலையை செய்ய சொன்ன அம்ருதாவின் அப்பாவே தற்போது தற்கொலை செய்து கொண்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+