கமலாவை விடுங்க.. ட்ரம்ப் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து அசத்திய கிராம மக்கள்!
ஹைதராபாத்: அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தில், ட்ரம்ப் சிலைக்கு மக்கள் பால் அபிஷேகம் செய்துள்ள சம்பவம் பெரும் பேசு பொருளாகி உள்ளது.
அமெரிக்க தேர்தல் முடிவுகள் சர்வதேச அளவில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த போகிறது? என்கிற டோனில் மீடியாக்களில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்போது, திருவாரூரில் கமலா ஹாரிஸின் வெற்றியை வேண்டி சூடம் ஏற்றி, பொங்கலிட்டு ஒரு சாரார் சிறப்பு வழிபாடு நடத்தியிருந்தனர். கமலா ஹாரிஸின் தாத்தாவின் சொந்த ஊர் இது என்பதால், மக்கள் கமலாவின் வெற்றியை எதிர்பார்த்திருந்தனர். ஊர்க்காரர்கள் மட்டுமல்லாது, அமெரிக்காவிலிருந்து இங்கு வந்த 2 பெண்களும் கமலாவுக்காக பிரார்த்தனை செய்திருந்தனர்.

ஆனால் தேர்தலில் ட்ரம்ப் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றுவிட்டார். இது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்திவிட்டது. மறுபுறம், தெலுங்கானாவில் ட்ரம்பின் வெற்றியை கிராம மக்கள் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். அதாவது தெலுங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டத்தில் கொன்னேவ எனும் கிராமத்தில் ட்ரம்ப்புக்கு சிலை இருக்கிறது. கடந்த 2016-2021 வரை அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இருந்தபோது அவரது நிர்வாக திறனால் வியந்த புஸ்ஸா கிருஷ்ணா என்பவர், அவருக்கு சிலை வைத்தார். தினமும் சிலைக்கு பூஜை செய்வது, அபிஷேகம் செய்வது என ட்ரம்பை கடவுளாகவே வழிப்பட்டு வந்திருக்கிறார்.
இப்படி இருக்கையில் எதிர்பாராதவிதமாக 2020ல் அவர் உயிரிழந்துவிட்டார். ஆனால், ட்ரம்ப் தற்போது மீண்டும் தேர்தலில் ஜெயித்ததால், கிருஷ்ணா நினைவாக, ட்ரம்ப்புக்கு பால் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். ட்ரம்ப் நீண்ட ஆயுளுடன், தொடர் வெற்றியுடன் இருக்க வேண்டும் என்றும் வேண்டி மக்கள் வழிபட்டுள்ளனர். ட்ரம்ப்புக்கு பால் அபிஷேகம் செய்து கிராம மக்கள் வழிப்பட்டிருந்த சம்பவம் தெலுங்கானா மட்டுமல்லாது அமெரிக்கா வரை பேசு பொருளாகி உள்ளது.
அமெரிக்காவின் துணை அதிபராக ஆக உள்ள ஜேடி வான்ஸ்ஸை ஏற்கெனவே ஆந்திரா மக்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட உஷா சிலுக்கூரியின் கணவர்தான் இந்த ஜேடி வான்ஸ். எனவே, இவர் ஆந்திராவின் மருமகன் என்று கொண்டாடப்பட்டு வருகிறார். இப்படி இருக்கையில், தெலங்கானாவில் ட்ரம்ப்பை கடவுளாக வைத்து வழிபாடு நடத்தியுள்ள சம்பவம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications