வயதானவர் என்றும் பாராமல்.. நடுரோட்டில் முடியை பிடித்து இழுத்து தாக்கிய மருமகள்.. படங்கள் வைரல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வயதானவர் என்றும் பாராமல் தனது மாமியாரை நடுரோட்டில் இழுத்து போட்டு மருமகள் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வயதான பெண்ணை ஒரு இளம் பெண்ணும், மற்றொரு பெண்ணும் நடுரோட்டில் இழுத்து போட்டு தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

அவர்கள் இருவரும் அந்த வயதான மூதாட்டியின் முடியை பிடித்து வீட்டிலிருந்து இழுத்து வருகிறார்கள். பின்னர் நடு ரோட்டில் அமர வைத்து கடுமையாக தாக்குகிறார்கள்.

சமூகவலைதளங்கள்

சமூகவலைதளங்கள்

இந்த வீடியோவை அந்த பெண்ணின் குழந்தை பதிவு செய்து தனது பாட்டிக்கு நடக்கும் கொடுமைகளை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஹைதராபாத் போலீஸுக்கும் போனது. இதை பார்த்துவிட்டு ஷாக்கான போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

மூதாட்டி

மூதாட்டி

இந்த விசாரணையில் அந்த மூதாட்டியை அவரது மருமகளும், மருமகளின் தாயும் சேர்ந்து தாக்குவது தெரியவந்தது. மேலும் தாக்குதலுக்குள்ளானவர் மல்லேபள்ளி பகுதியை சேர்ந்த தஷானிமா சுல்தானா என்ற மூதாட்டி என்பது தெரியவந்தது. இவரது கணவர் அகமது சயீத் கான். இவர்களது மகன் உபைத் அலி கான்.

உபைத்

உபைத்

இவர் கடந்த 10 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தார். ஏற்கெனவே திருமணமான உபைத் கடந்த 2019-ஆம் ஆண்டு உஷ்மா பேகம் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து உபைத் மட்டும் சவுதிக்கு சென்றுவிட்டார்.

மாமியாரை தாக்கிய மருமகள்

மாமியாரை தாக்கிய மருமகள்

இந்த நிலையில் கணவர் ஊருக்கு சென்றதிலிருந்து உஜ்மா பேகம் தனது மாமியார் தஷானிமாவை வயதானவர் என்றும் பாராமல் கொடுமைப்படுத்தி வருவது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி வழக்கம் போல் தஷானிமாவிடம் உஜ்மா தகராறு செய்துள்ளார்.

நடுரோட்டில்

நடுரோட்டில்

இந்த உஜ்மாவுடன் அவரது தாயாரும் சேர்ந்து கொண்டார். பின்னர் அவரை தரதரவென வீட்டை விட்டு இருவரும் இழுத்து வந்தனர். பின்னர் நடுரோட்டில் முடியை பிடித்து இழுத்து கடுமையாக தாக்கினர். இதில் அந்த மூதாட்டி தன்னை தாக்க வேண்டாம் என கூறியும் கேட்காத இரு பெண்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

எனினும் பாட்டி தினமும் தனது அம்மாவிடம் துன்புற்று வந்த நிலையில் சம்பவத்தினத்தன்று சற்று ஓவராக போய்விட்டதால் அந்த சிறுவன், சாலையில் நடந்த தாக்குதல் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீது ஹுமாயுன் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+