• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கல்யாணமாடா பண்ற... தங்கையின் கணவரை நடு ரோட்டில் ஓட ஓட குத்திய கொடூரம் - ஐதராபாத்தில் அதிர்ச்சி

|

ஐதராபாத்: இதயத்தை உறைய வைக்கும் சம்பவம் ஒன்று ஐதராபாத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் நடைபெற்றது. ஒரு இளைஞனை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி ரத்தத்தில் குளிக்க வைத்தனர். ஒரு பெண் கண்ணீர் மல்க மன்றாடியும் கேட்காமல் மீண்டும் மீண்டும் குத்தி விட்டு அசால்டாக நடந்து சென்றனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுனர்.

யார் இவர்கள் எதற்காக இந்த ரத்த வெறி என்று பலரும் யோசிக்க இது காதல் திருமணம் செய்த ஜோடியை அந்த பெண்ணின் அண்ணன்தான் குத்தினான் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கத்திக்குத்துக்குஆளான நபரின் பெயர் இம்தியாஸ் என்பதாகும். இவர் ஃபாத்திமா என்ற பெண்ணை கடந்த 6ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி இந்த திருமணம் நடந்ததால் பெண்ணின் அண்ணன்தான் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளான்.

இம்தியாஸ் ஃபாத்திமா காதலுக்கு வயது 5. இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை. எதிர்ப்பு அதிகமாக அதிகமாக காதலர்களின் வேகம் அதிகரித்தது. கடந்த வாரம் ஃபாத்திமா வீட்டை மாயமானார்.

மாயமான பாத்திமா

மாயமான பாத்திமா

ஃபாத்திமாவை காணவில்லை என்று அவரது பெற்றோரும், அண்ணனும் ஹைதராபாத் எஸ்ஆர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்ததில் இம்தியாஸை ஃபாத்திமா திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஃபாத்திமா குடும்பம் பழிவாங்க காத்திருந்தது.

நம்பி போன இம்தியாஸ்

நம்பி போன இம்தியாஸ்

திருமணம் சம்மதம் என்பது போல பேசி வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார் ஃபாத்திமாவின் அப்பா. இதை நம்பிய இம்தியாஸ் பெற்றோர், பாத்திமா வீட்டிற்கு காரில் அனுப்பி வைத்தனர். நடுரோட்டில் ஒரு கும்பல் அவர்கள் சென்ற காரை மறித்தது.

கத்தியால் குத்திய கும்பல்

கத்தியால் குத்திய கும்பல்

காரை நிறுத்தி இம்தியாஸ் இறங்கவே மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் அந்த கும்பல் கத்தியால் கொடூரமாக குத்தியது. இதைப்பார்த்த பாத்திமா அவரை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினாள். ஆனாலும் ரத்த வெள்ளத்தில் சாய்த்து விட்டு அசால்டாக நடந்து சென்றது. இதை தடுக்க யாருமே வரவில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்தனர். தெலுங்கு சினிமாவை விட படுபயங்கரமாக அரங்கேரிய இந்த கொலைவெறித்தாக்குதல் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்த கொலைவெறித்தாக்குதலில் இம்தியாஸ் தலையிலும், உடம்பிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதிக ரத்தப்போக்கும் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்தியாஸை குத்தியது பாத்திமாவின் அண்ணன்கள் முகமது அலி மற்றும் அகமது அலி என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த உடுமலை சங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆணவக்கொலை செய்யப்பட்டார். அதே போல நெஞ்சை பதைபதைக்கும் சம்பவம் பரபரப்பான ஹைதராபாத் சாலையில் நடந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
A shocking incident has come to the fore wherein a 21-year-old man was attacked by his in-laws in bustling SR Nagar area of the hyderabad for marrying the woman of his choice.The victim, identified as Imtiaz, was allegedly stabbed by his wife Fatima's father and relatives.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more