"இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய்.." பகீர் கிளப்பும் ஆய்வு முடிவுகள்! என்ன தான் பிரச்சினை
டெல்லி: இந்தியாவில் கேனசர் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் இதனால் இந்தியாவைச் சர்வதேச கேன்சர் தலைநகர் என்று அழைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாக ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. இதன் காரணமாகவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் சுகாதாரம் இதேபோல சிறப்பாக இல்லை.

நமது நாட்டின சுகாதாரம் எந்தளவுக்கு இருக்கிறது என்பது குறித்து வெளியாகி உள்ள ரிப்போர்ட்ட அனைவருக்கும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
பரபர ரிப்போர்ட்: ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவாத தொற்று அல்லாத நோய்களில் கூட நமது நாட்டில் ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக நாடு முழுவதும் கேன்சர் பாதிப்பு ஏற்படுவதும் கணிசமாக அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அப்பல்லோ மருத்துவமனை ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை அவர்கள் உலக புற்றுநோய் தலைநகரம் என்று குறிப்பிட்டுள்ளனர்.. இந்தியர்களில் மூன்றில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைக்கு உள்ளனர். அதாவது அவர்கள் உடலில் உள்ள சுகர் லெவல் இயல்பை விட அதிகமாக இருக்கிறது. அதேநேரம் நீரிழிவு நோய் என்று வகைப்படுத்தும் அளவுக்கு அதிகமாக இல்லை என்பதே அதன் பொருளாகும்.
பாதிப்பு மோசம்: அதேபோல மூவரில் இருவர் உயர் ரத்த அழுத்தம் பாதிக்கும் சூழலில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.. புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய்கள் மற்றும் மனநலக் கோளாறுகள் உள்ளிட்ட மற்றவருக்குப் பரவாத தொற்று அல்லாத நோய்களில் நாட்டில் அதிகரித்துள்ளதாகவும் இது இது நாட்டின் ஆரோக்கியத்தைக் கணிசமாகப் பாதிக்கிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கேன்சர் தலைநகர்: குறிப்பாக கேன்சர் பாதிப்பு இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் உலகின் புற்றுநோய் தலைநகரமாக இந்தியா மாறி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதிலும் இந்த பாதிப்பு இளைஞர்களுக்கு அதிகம் ஏற்படுவது மிகப் பெரிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்தியாவில் பெண்களிடையே அதிகம் ஏற்படும் கேன்சராக மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் இருக்கிறது. அதேபோல ஆண்களிடையே அதிகம் ஏற்படும் கேன்சராக, நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளன. இந்தியாவில் மற்ற நாடுகளைக் காட்டிலும் விரைவாகப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது என்ற போதிலும் நாட்டில் புற்றுநோய் பரிசோதனை விகிதங்கள் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
வேறு பாதிப்புகள்: கேன்சர் தவிர இந்தியர்களிடையே உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 2016இல் உடல் பருமன் விகிதம் 9 சதவீதமாக இருந்த நிலையில், 2023இல் அது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் உயர் ரத்த அழுத்த வழக்குகள் 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பிரச்சினை என்ன: நமது நாட்டில் எதாவது ஒரு பிரச்சினை என்றால் மட்டுமே நாம் மருத்துவமனைகளுக்குச் செல்வோம். ஆனால், அது தவறான ஒரு நடைமுறை.. குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை நாம் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது தான் நமது உடலில் இருக்கும் சிக்கல்களை நம்மால் கண்டறிய முடியும். ரத்த அழுத்தம், பிஎம்ஐ ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications