ஓட்டு இல்லை.. கண்டுகொள்ளவும் ஆளில்லை! குஜராத்தில் கண்ணீரில் வாழும் 17 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்
காந்திநகர்: குஜராத்தில் பிழைப்புக்காக புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் 17 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்களின் நலன்கள் குறித்தும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் எந்தக் கட்சியும் கவலைப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த 17 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்களில் கணிசமானோருக்கு வாக்குரிமை இல்லாததால் அவர்களை ஒரு பொருட்டாக கூட எந்த அரசியல் கட்சிகளும் நினைப்பதில்லை.
இதன் காரணமாக, பல தசாப்தங்களாக கண்ணீருடனும், வலிகளுடனுமே இவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த சூரத் தொகுதி
குஜராத் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. இந்த தொகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தியது சூரத் மாவட்டத்தில் இருக்கும் 19 தொகுதிகளில் தான். இந்த 19 தொகுதிகளில் யார் அதிக சீட்களை கைப்பற்றுகிறார்களோ, அந்தக் கட்சியே ஆட்சியில் அமரும் என்பது குஜராத் அரசியலில் எழுதப்படாத விதிகளில் ஒன்று.

துன்பத்தில் உழலும் 17 லட்சம் தொழிலாளர்கள்
அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சூரத் தொகுதியில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சுழன்று சுழன்று தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்டன. ஆனால், அவற்றில் எந்தவொரு கட்சியும் அங்கு வாழ்ந்து வரும் 17 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்களின் நலன் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏனெனில், அவர்களில் கணிசமானோருக்கு வாக்குரிமை கிடையாது. இதனால் அவர்களை பற்றி பேசவோ, அவர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என்பது குறித்து கேட்கவோ எந்தக் கட்சிக்கும் நேரம் இருப்பதில்லை.

கொத்தடிமைகளை போல..
சூரத்தில் பரவலாக வசிக்கும் 17 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்களில் ஒடிசா, உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம். இவர்கள் அங்குள்ள துணி தயாரிப்பு நிறுவனங்களிலும், வைரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால் எந்த அரசியல் கட்சிகளும் இவர்களுக்கு ஆதரவாக வர மாட்டார்கள் என தெரிந்துகொண்ட அந்த நிறுவனங்கள், இவர்களிடம் கொத்தடிமைகளை போல வேலை வாங்குகின்றன. நாளொன்றுக்கு சுமார் 12 மணிநேரம் இவர்கள் வேலை பார்க்க வேண்டும். ஆனால் மாதத்துக்கு ஒரு நாள் மட்டுமே இவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

"அரசியல் அங்கீகாரம் வேண்டும்"
இதுதவிர, இவர்களுக்கு பணிப் பாதுகாப்பு, பணிக்கொடை என ஏதும் கிடையாது. இவ்வளவு வேலையை வாங்கியும் இவர்களுக்கு மிக சொற்ப அளவு ஊதியமே அந்நிறுவனங்கள் வழங்குகின்றன. அதுமட்டுமல்லாமல், அவர்களை எந்த நேரம் வேண்டுமானாலும் வேலையில் இருந்து நிறுவனங்கள் நீக்குகின்றன. இதுபோன்ற சூழலிலும், 3 வேளை உணவுக்காக மட்டுமே அவர்கள் சூரத்தை விட்டு செல்லாமல் இருக்கிறார்கள். எனவே, இந்த வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமையை கொடுத்து, அவர்களுக்கும் அரசியல் ரீதியிலான அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. பரிசீலிக்குமா அரசியல் கட்சிகள்?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications