ஓடும் ரயிலில்117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்ஸ் வெடிபொருட்கள்; பெண்ணிடம் விசாரணை!
கோழிக்கோடு: சென்னை-மங்களூரு ரயிலில் 117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்ஸ் கொண்டு சென்ற திருவண்ணாமலையை சேர்ந்த பெண் பிடிபட்டார்.
கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இந்த வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட ரமணி என்ற பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு கர்நாடக மாநிலம் மங்களூரு நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் இன்று காலை கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையம் கடந்து சென்று கொண்டிருந்தது.இந்த ரயிலில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக பாலக்காடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கோழிக்கோடு ரயில் நிலையத்தில் அந்த ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது டி1 பெட்டியில் இருக்கைக்கு அடியில் ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்ஸ் வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
இதனை ரயிலில் கொண்டு சென்றது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரமணி என்பது தெரியவந்தது. அவர் காட்பாடியில் இருந்து தலசேரிக்கு சென்றுள்ளார். தலசேரியில் கிணறு தோண்டுவதற்கு பயன்படுத்துவதற்காக ஜெலெட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டஸ் எடுத்து செல்வதாக ரமணி போலீசாரிடம் தெரிவித்தார். ரமணியிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications