தெலுங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு: பாஜக எதிர்ப்பு
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 12 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலின்போது தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியின் தேர்தல் அறிக்கையில், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு 12 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதியின் நிறுவனத் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து தேர்தல் அறிக்கையில் கூறிய 12 சதவீத இட ஒதுக்கீடு வாக்குறுதியை நிறைவேற்ற ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தெலுங்கானா மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி, மாநில அரசின் அரசின் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மதரீதி அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவது என்பது பாஜகவின் கொள்கைக்கு எதிரானது. மதவாரியான ஒதுக்கீடுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மேலும், இந்த முடிவானது மக்களுக்கான நலத்திட்டம் சார்ந்த அரசின் நடவடிக்கையாக இல்லை. மாறாக, முஸ்லிமகளை மகிழ்விப்பதற்கு கொண்டு வரப்படும் திட்டமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. என்று அந்த பொதுக் கூட்டத்தில் பேசிய கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications