பெங்களூர் லால்பாக் மலர் கண்காட்சி இன்று துவக்கம்
பெங்களூர்: புகழ்பெற்ற லால்பாக் பூங்காவில் சுதந்திர தினத்தையொட்டி இன்று மலர் கண்காட்சி துவங்குகிறது.
பெங்களூரில் லால்பாக் பூங்காவில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத்துவது வழக்கம். அதன்படி, 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லால்பாக் மலர் கண்காட்சி இன்று தொடங்கி வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்வர் சித்தராமையா இன்று காலை 11.30 மணிக்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

மாநில தோட்டக்கலைத்துறை, மைசூர் பூங்கா சங்கம் ஆகியவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. இந்த கண்காட்சியில் பூங்காவின் கண்ணாடி மாளிகையில் 300க் கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 50 ஆயிரம் ரோஜா மலர்கள் இடம் பெற்றுள்ளது..
ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள பல சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. கார்ட்டூன் வடிவிலான மலர் காட்சிகளும், மிருகங்களின் உருவத்திலும் மக்களை கவரும் வகையில் கண்காட்சியில் பூக்கள் இடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் மலர் கண்காட்சியை கண்டுகளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இது லால்பாக்கில் நடத்தப்பட உள்ள 200வது மலர் கண்காட்சியாகும். இதனால் விமரிசையாக விழாவை நடத்த தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது. இக்கண்காட்சியை பார்வையிட கர்நாடகாவிலிருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பெங்களூர் வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications