செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் 25 தமிழர்கள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லூர்: ஆந்திர மாநிலத்தில், செம்மரம் வெட்டி கடத்தியதாக 25 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் செம்ரமம் வெட்டி கடத்துவதாக கூறி அவ்வப்போது போலீசாரால் தமிழகத்தை சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். என்கவுண்டரில் பல தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

25 Tamils have been arrested for smuggling the red sandal tree

இந்த நிலையில், நெல்லூர் கதிரிநாயுடு வனப்பகுதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக இன்று ஆந்திர போலீசார் 25 தமிழ் கூலித் தொழிலாளிகளை கைது செய்துள்ளதோடு ரூ.48 லட்சம் மதிப்பிலான செம்மரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்றபோது காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Andhra, 25 Tamils have been arrested for smuggling the red sandal tree.
Please Wait while comments are loading...