For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை: 24 மணிநேரத்தில் 26 பேர் பலி

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு | கேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை- வீடியோ

    இடுக்கி: கேரளாவில் கனமழை வெள்ளத்தால் 24 மணிநேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

    கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள 78 அணைகளில் 24 அணைகள் நிரம்பிவிட்டன.

    26 dead in flood affected Kerala

    இதையடுத்து மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கமான செருத்தோனி அணையின் ஷட்டர் 26 ஆண்டுகளுக்கு பிறகு திறந்துவிடப்பட்டுள்ளது. முன்னதாக எர்ணாகுளத்தில் உள்ள இடமலையார் அணை திறந்துவிடப்பட்டது.

    26 dead in flood affected Kerala

    கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வயநாடு மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது.

    26 dead in flood affected Kerala

    கனமழை, வெள்ளத்தால் 24 மணிநேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு அனைத்து உதவிகளும் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.

    26 dead in flood affected Kerala

    இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனம் முதல் மிக கன மழை பெய்து வருகிறது. மக்கள் யாரும் பயப்பட வேண்டாம், தேவையான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கேரள மாநில முதல்வர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    English summary
    26 people died in 24 hours in Kerala that is hit by flash floods. Northern districts in Kerala have been witnessing heavy to very heavy rain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X