For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

16வது லோக்சபாவில் 61 பெண் எம்.பிக்கள் - 75% பேர் பட்டதாரிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: 16 -வது லோக்சபாதான் அதிக பெண் உறுப்பினர்களை கொண்டதாக இருக்கிறது.

கலைக்கப்பட்ட 15-வது மக்களவையில் 58 பெண்கள் உறுப்பினர்கள் இருந்தனர்.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 61 பேர் பெண்கள்.

அதிமுக 4 பெண் எம்.பிக்கள்

அதிமுக 4 பெண் எம்.பிக்கள்

அமைக்கப்பட உள்ள 16-ஆவது லோக்சபா, அதிகபட்சமாக அதிமுக சார்பில் 4 பெண்கள் எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சராசரி சொத்துமதிப்பு

சராசரி சொத்துமதிப்பு

புதிய மக்களவை உறுப்பினர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 6 கோடியிலிருந்து 14 கோடியாக அதிகரித்துள்ளது. 543 உறுப்பினர்களில், 449 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

சராசரி வயது 54

சராசரி வயது 54

இந்த லோக்சபா உறுப்பினர்களின் சராசரி வயது 54-ஆக இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி மிக அதிக வயதுடைய எம்.பி ஆவார் அவரது வயது 86.

26 வயது எம்.பிக்கள்

26 வயது எம்.பிக்கள்

12 எம்.பிக்கள் 30வயதுக்கும் குறைவானவர்கள். அதில் நான்கு பேர் பெண்கள். தென்சென்னை எம்.பி. ஜெயவர்த்தன், மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியின் சகோதரரின் மகன் அபிஷேக் பானர்ஜி உள்பட 5 பேருக்கு 26 வயதுதான் ஆகிறது.

75 சதவிகிதம் பட்டதாரிகள்

75 சதவிகிதம் பட்டதாரிகள்

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிக்களில் 75 சதவிகிதம் பேர் பட்டதாரிகள் என்கிறது புள்ளிவிபரம்.

English summary
As far as the educational profile of the MPs is concerned, 75% among them have at least a graduate degree
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X