ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 3 பேர் பலி.. ஜம்மு காஷ்மீரில் சோகம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் சென்ற டிரக் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். மோசமான வானிலையால் இந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக ராணுவ அதிகாரிகள் கூறினர்.
ஜம்மு காஷ்மீரில் இன்று ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். ஜம்மு காஷ்மீரின் பந்திப்போராவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள எஸ்.கே பேயன் என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் டிரக் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். பிற்பகல் 2.30 மணியளவில் இந்த டிரக் சாலையை விட்டு விலகி பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. மோசமான வானிலையால் சாலை சரியாக கண்ணுக்கு புலப்படாததால் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
விபத்தில் ராணுவ வாகனம் சிக்கிய தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு பணி தொடங்கியது. உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. காயம் அடைந்த வீரர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில், 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றனர்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று வீரர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் இதே போன்ற ஒரு விபத்து பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்றது. ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த டிரக் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
பூஞ்ச் செக்டாரில் உள்ள நிலைகளுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தற்போது கடுமையான பனிப்பொழிவு காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையால் சில அடி தூரமே சாலைகள் கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications