Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 மாத பிஞ்சு குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றும் இதய நோய் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பலவீனமான இதயத்துடன் பிறந்த அபு என்கிற குழந்தையின் அறவை சிகிச்சைக்கு உதவுங்கள்.

மொராதாபாத்தில் ஒரு சராசரி எளிய வாழ்க்கை நடத்தி வருபவர் தான் முகமத் இம்ரான் என்பவர். அவரின் வருமானம் முழுவதும் குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கே சென்று விடும் ஒரு ஏழைக் குடும்பம். அவரின் மாத வருமானம் ரூபாய் 10,000 யத்தையும் தன் குழந்தையின் வாழ்க்கைக்காக கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வருகிறார்.

 6 month old abu must undergo two urgent open heart surgeries to Live

அவருடைய பிஞ்சு ஆண் குழந்தையும் பிறக்கும் போது மழலை சிரிப்புடனும் அழகாகவும் தான் இருந்தது. "அபு பிறந்த பிறகு நான் ஒரு தந்தையாக அடைந்த சந்தோஷம் எல்லையில்லாது. எல்லா குழந்தையை போலவே அவனும் ஆரோக்கியமாகத் தான் இருந்தான்". ஆனால் அவரின் சந்தோஷம் ஒரு கணம் கூட நீடிக்கவில்லை அவரின் செல்லக் குட்டி பால் அருந்தவில்லை, தொடர்ச்சியான மூச்சுத் திணறல் மற்றும் இருமலுடன் அவன் ஒவ்வொரு முறை அழுகும் போதும் அவரின் சந்தோஷம் எல்லாம் வேதனையாகவும் வலியாகவும் மாறி நிற்கிறது.

அதிகமான நிமோனியா காய்ச்சலுடன் அவசர அவசரமாக அபு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான் . "அவனின் இதயம் பிறக்கும் போதே பலவீனமாக இருப்பதால் மருத்துவர்கள் அவனின் நிலைமை மிகவும் மேசமாகி வருகிறது என்கின்றனர்.
அபுவின் இதயம் பலவீனமாகி துடிக்கவே கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது. மூச்சு விடக் கூட முடியாமல் தவிக்கும் அந்த சின்னஞ் சிறு குழந்தையின் கதறல் அந்த அப்பாவின் நெஞ்சில் ரணத்தை மட்டுமே கொடுக்கிறது.

 6 month old abu must undergo two urgent open heart surgeries to Live

தன் பையன் அபு மீண்டு உயிர் வாழ அவனுக்கு மூன்று இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. முதல் அறுவை சிகிச்சை உடனே செய்தாக வேண்டும். அப்பொழுது தான் அவன் உயிரை காக்க இயலும்.

முகமத் இம்ரான் இதற்காக 3 லட்சம் ரூபாய் வரை தன் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வங்கிக் கடன் மூலம் பணத்தை திரட்டி முதல் அறுவை சிகிச்சையை நடத்தி உள்ளார்.
அபு இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறான். ஆனால் அவன் உயிருடன் பிழைக்க மீதமுள்ள அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

 6 month old abu must undergo two urgent open heart surgeries to Live

எனவே இதற்காக 3.5 லட்சம் வரை திரட்ட வேண்டியுள்ளது. டெல்லியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தன் மகன் அபுவை மீட்டெடுக்க இதற்காக போராட வருகிறார்.
"இதற்காக அவர் நம்பியிருப்பது நம்மளைத் தான். உங்கள் உதவும் கரங்கள் மூலம் அவர் மகனின் வாழ்க்கையை எழச் செய்யுங்கள். உங்களது சிறு உதவி அவர் மகனின் எதிர்காலத்தின் வெளிச்சமாக அமையட்டும். ஒரு தந்தையின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க நாமும் கை கொடுப்போம்".
மகனின் உயிரை காக்க போராடும் இந்த தந்தைக்கு உதவ நினைத்தால் இங்கே உதவி செய்ய முற்படுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+