10 ரூபாய் தர்றேன்! 13 வயது சிறுமியை சீரழித்த குஞ்ச்ராம், ரமேஷ்! சட்டீஸ்கரில் ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பத்து ரூபாய் தருவதாக சிறுமையை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட 76 வயது முதியவர் மற்றும் ஒரு இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு சில செய்திகளை கேட்டாலே கோபம் வரும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த செய்திகள் சம்பவங்களை கேள்விப்படும் போது கோபப்படாதவர்களே இருக்க முடியாது.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் குறிப்பாக 18 வயது உட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் அதனை தடுக்க காவல்துறையும் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தற்போது வரை குறைந்த பாடில்லை.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஒருபுறம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக பத்து ரூபாய் தருவதாக கூறி 13 வயது சிறுமியை இருவர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பலோடபஜார் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர்கள் இருவரும் வேலைக்காக வெளியே சென்று விட்ட நிலையில் அந்த வீட்டில் வசிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் தனியாக இருந்துள்ளார். நிலையில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த குஞ்ச்ராம் என்ற 76 வயது முதியவர் சிறுமிக்கு பத்து ரூபாய் தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார்.

13 வயது சிறுமி

13 வயது சிறுமி

மேலும் அவரது உறவினரான ரமேஷ் என்பவரும் இதே போல பணம் தருவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகளில் இருந்தும் சிறுமி வெளியே வருவதைக் கண்ட பக்கத்து வீட்டுப் பெண் இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் இடம் அவரது பெற்றோர் கேட்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இருவர் கைது

இருவர் கைது

ஒருமுறை இருமுறை அல்ல சுமார் 50 முறைக்கு மேல் இருவரும் சிறுமியை பணம் தருவதாக அழைத்துச் சென்று அவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து அவரது பெற்றோர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குஞ்சுராம் வருமா மற்றும் ராமேஸ்வர்மா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+