For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீர் திடீர்ன்னு உடையுதாம், சாயுதாம்..டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏர் டர்புலன்ஸால் பதட்டம்

கடந்த வெள்ளிக்கிழமை ஏர் இந்தியா விமானம் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அதன் உட்பக்க பாகங்கள், விமானம் பறக்கும் போதே உடைந்து விழுந்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏர் டர்புலன்ஸால் பதட்டம்-வீடியோ

    டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஏர் டர்புலன்ஸ் காரணமாக விமானத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இதனால் பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.

    இதையடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமிர்தசரசில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. ஏர் இந்தியாவிற்கு சொந்தமான போயிங் 787 ரக விமானம் இது.

    விமானத்தின் உட்பக்க பாகங்கள் உடைந்து அங்கு இருந்த பயணிகளின் மீது விழுந்துள்ளது. இதில் உள்ளே இருந்த பயணிகளுக்கு மோசமான காயம் ஏற்பட்டு இருக்கிறது.

    என்ன விஷயம் நடந்தது

    என்ன விஷயம் நடந்தது

    விமானம் வானில் சென்று கொண்டு இருக்கும் போதே, பாதியில் பெரிய த்தம் கேட்டு இருக்கிறது. இதனால் விமானத்திற்குள் பொருட்கள் ஆடியுள்ளன. திடீரென பயணிகளின் இருக்கைக்கு மேல் பக்கம் உடைந்து பயணிகளின், தலையில் விழுந்து காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதே போல் அவசரத்திற்கு கொடுக்கப்படும், ஆக்சிஜன் டியூப்கள் வெளியே வந்துள்ளது.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    மொத்தம் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. பயணிகள் உட்கார்த்து இருக்கும், மேற்பகுதி உடைந்து தலையில் விழுந்ததை அடுத்து மோசமாக காயம் ஏற்பட்டு இருக்கிறது. பக்கவாட்டு கண்ணாடியும் உடைந்துள்ளது. இதில் ஒரு பயணி மோசமாக காயம் அடைந்துள்ளார். விமானம் தரையிறக்கப்பட்ட போது, அந்த பயணிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    காரணம்

    காரணம்

    விமானம் 8000 அடி தூரத்தில் இருந்து, 20,000 அடி தூரத்திற்கு சென்று கொண்டு இருக்கும் போது, ஏர் டர்புலன்ஸ் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிக உயரத்தில் விமானம் பறக்கும்போது காற்றுக்கும், விமானத்திற்கும் இடையிலான உராய்வு அதிகமாக இருந்தால் இதுபோல விமானத்திற்குப் பாதிப்பு ஏற்படும். நவீன விமானங்கள் இதை சமாளிக்கும் வகையில் உறுதியாக இருக்கும். அறுதப் பழசான விமானமாக இருந்தால் இதுபோல கண்ணாடிகள் உடையும்.

    விசாரணை

    இது ஏர் டர்புலன்ஸால் ஏற்பட்ட சம்பவம்தான் என்றாலும் கூட இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    English summary
    A bizarre problem in Air India makes it land urgently. Pilot took the call due to heavy turbulance which made the inside flight parts to fall aprat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X