For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷோபா டேவால் கேலி செய்யப்பட்ட "ஓவர் வெயிட்" போலீஸ்காரருக்கு "ஆபரேஷன்"!

மத்தியபிரதேசத்தில் அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வந்த போலீஸ்காரர் ஒருவருக்கு இன்று கேஸ்ட்டிரிக் பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: மத்தியப்பிரதேசத்தில் 180 கிலோ எடையுடன் அவதிப்பட்டு வந்த ஒரு போலீஸ்காரருக்கு இன்று எடையை குறைப்பதற்கான ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்துள்ளது. எழுத்தாளர் ஒருவரின் கேலி டிவிட்டால் அவரது வாழ்க்கையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேச காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் டவுலத்ராம் ஜோகவாத். இவர் 1993ஆம் ஆண்டு ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

A police mocked for his over weight undergoes surgery in Mumbai

இதனால் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தால் அவரது எடை எதிர்பாரத அளவுக்கு கூடியது. தொப்பையும் பெருகி தொங்கியது. உடல் எடை அதிகரிப்பால் பெரும் அவதியடைந்து வந்தார் இன்ஸ்பெக்டர் ஜோகவாத்.

நாற்காலியில் உட்கார முடியாத போலீஸ்

உட்காருவதற்கு நாற்காலிகள் இடம் கொள்ளாத நிலையில் வெயிட்டை தாங்குவதற்காக இரண்டு நாற்காலிகளை ஒன்றன் மேல் ஒன்று போட்டு ஜோகவாத் அமர்ந்து வந்தார். அண்மையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

டிவிட்டரில் கேலி

அப்போது ஜோகவாத் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இதனை பார்த்த எழுத்தாளர் ஷோபா டே "கனரக பந்தோபஸ்ட்" என ஜோகவாத் போட்டோவுடன் டிவிட்டரில் போட்டு கேலி செய்திருந்தார்.

ஆலோசித்த அதிகாரிகள்

இதனால் ஜோகவாத் பலரால் கேலி செய்யப்பட்டார். இந்த விஷயத்தை அறிந்த போலீஸ் உயரதிகாரிகள் ஜோகவாத் எடையை குறைக்க சிகிச்சையளிப்பது குறித்து ஆலோசித்தனர்.

வெற்கரமாக முடிந்த ஆப்ரேஷன்

இதைத்தொடர்ந்து சயிஃபீ மருத்துவமனை மருத்துவர் மப்சல் தலைமையிலான குழுவினர் இன்ஸ்பெக்டர் ஜோகவாத்துக்கு சிகிச்சையளிக்க முன்வந்தனர். இன்று அவருக்கு எடையை குறைக்கும் கேஸ்ட்டிரிக் பைபாஸ் ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

சில நாட்களில் வீடு திரும்பலாம்

ஜோகவாத்தை பரிசோதித்த டாக்டர்கள் இன்னும் 15 நாட்களுக்கு அவர் திரவ உணவு தான் உட்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். அவர் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் வீடு திரும்பலாம் தெரிவித்துள்ளனர்.

தப்பான டிவிட் என் வாழ்கையை மாற்றிவிட்டது

முன்னாதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோகவாத் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும் ஒரு தப்பான டிவிட் என் வாழ்கையை மாற்றிவிட்டது என்றும் அவர் கூறினார்.

கேலி காயப்படுத்தியது

1993ஆம் ஆண்டு செய்த ஒரு அறுவை சிகிச்சையால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு என் எடை கூடிவிட்டது. டிவிட்டரில் என்னை கேலி செய்தது மிகவும் காயப்படுத்தியது. இவ்வாறு ஜோகவாத் செய்தியாளர்களிடம் கூறினார்.

English summary
The Madhya Pradesh policeman, whose weight problem became a subject of online discussion after he was fat-shamed by writer-columnist Shobhaa De on Twitter, today underwent a gastric bypass surgery here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X