For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சம்ஜாதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு… சாமியார் அசீமானந்த் உள்பட 4 பேரும் விடுதலை

Google Oneindia Tamil News

பஞ்சகுலா:சம்ஜாதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சாமியார் அசீமானந்த் உள்பட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்று கொண்டிருந்த சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. அதில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். லாகூருக்கு சென்று கொண்டிருந்த அந்த ரயிலில் மொத்தம் 6 பெட்டிகளில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

A special nia court acquitted all four accused in the samjhauta blast case

பெருந்தொகை.. தப்பி செல்ல வாய்ப்பு இருக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீன் தர லண்டன் நீதிமன்றம் மறுப்பு பெருந்தொகை.. தப்பி செல்ல வாய்ப்பு இருக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீன் தர லண்டன் நீதிமன்றம் மறுப்பு

ஆரம்பத்தில் இது பாகிஸ்தானின் சதி என்று மத்திய அரசு தெரிவித்தது. அதே போல, ஹைதராபாத்தின் மெக்கா வசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய சாமியார் அசிமானந்த்துக்கு, 68 பேரை பலி கொண்ட சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மெக்கா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு குண்டு வெடித்தது. அதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் தீவிர வாதிகள் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கில் சாமியார் அசீமானந்தா ஹரித்வாரில் வைத்து சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் தனக்குள்ள தொடர்பை அவர் ஒத்துக் கொண்டார். இது தொடர்பான வழக்கு பஞ்சகுலா கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அசீமானந்தா உள்பட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ராஜீந்தர் சவுத்ரி ஆகியோரையும் விடுவிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. குற்றம்சாட்டப் பட்டுள்ளவர்களுக்கு எதிராக குற்றத்தை சரிவர நிரூபிக்காததால் அவர்கள் விடுவிக்கப் படுவதாக நீதிமன்றம் கூறி இருக்கிறது.

English summary
A special NIA court on Wednesday acquitted all four accused in the Samjhauta Blast case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X