டோல்கேட்ல காசு கட்டணுமா? டோல் ஊழியரை வச்சு செய்த லாரி ஓட்டுனர்! 10 கி.மீ. லாரி பம்பரில் பரபர பயணம்
அமராவதி : ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சுங்கச்சாவடியை கடக்க பணம் கேட்ட டோல்கேட் ஊழியரை லாரியின் பம்பரில் தொங்க வைத்து பத்து கிலோமீட்டர் ஓட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச்சாவடிகள் அமைத்துள்ளது. இங்கு சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணமாக குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது.
இந்த சுங்கச் சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, 1992ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

டோல்கேட் கட்டணம்
தற்போது சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது ஆகும் அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. மேலும் அடிக்கடி சுங்கச்சாவடிகளில் ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அவற்றை அடித்து நொறுக்குவது மீன அசம்பாவிதங்களும் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஒரு சுவாரசிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகிறது.

ஓட்டுனர் ஆத்திரம்
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள டோல்கேட் ஒன்றினை லாரி ஓட்டுநர் ஒருவர் கடக்க முயன்றுள்ளார். அமத்தகாடு வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அந்த லாரியை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் ஓட்டியுள்ளார். குத்தி பகுதியில் உள்ள டோல்கேட்டை கடக்க முயன்றபோது அவர் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளார்.

10 கிலோமீட்ட பயணம்
இதையடுத்து அதனை கண்டுபிடித்த டோல்கேட் ஊழியரான சீனிவாசலு என்பவர் லாரியின் முன்னே சென்று நிறுத்தியுள்ளார். ஆனால் லாரியின் ஓட்டுநரை லாரியை நிறுத்தாததால், அதன் பம்பர் மீது ஏறி சீனிவாசலு லாரியை நிறுத்த சொல்லி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த லாரியின் ஓட்டுநரை முன்னாள் ஊழியர் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் லாரியை வேகமாக இயக்கி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக டோல்கேட் ஊழியர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களில் லாரியை பின்தொடர்ந்து சென்றனர்.

அதிரடி கைது
மேலும் இந்த சம்பவம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் லாரியை மடக்கி ஊழியரை மீட்டதோடு லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டோல்கேட்டுக்கு பணம் கேட்ட டோல்கேட் ஊழியரை லாரியில் வைத்து பத்து கிலோமீட்டர் பயணம் செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications