கிணற்றடியில் கதறிய பெண்! காது கொடுக்காத காம கொடூரர்கள்..லிப்ட் கொடுத்து கொலை செய்த சம்பவத்தால் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் தௌசா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 35 வயது திருமணமான பெண் இருவரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர்.

ஜெய்ப்பூர் மாவட்டத்தின் பஸ்ஸி காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கிணற்றில் திங்கள்கிழமை பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

35 வயதான அந்த பெண் ஞாயிற்றுக்கிழமை காலை தௌசாவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு செல்ல ஜெய்ப்பூரில் இருந்து பேருந்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

நீண்ட நேர பயணத்துக்கு பிறகு தௌசாவில் உள்ள தனது கிராமத்தின் பேருந்து நிலையத்துக்கு வந்த அவர், தனது பெற்றோரின் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார், அப்போது அங்கு இருவர் தங்கள் வாகனத்தில் லிப்ட் கொடுப்பதாக கூறியுள்ளனர். முதலில் அவர் மறுத்த நிலையில், நாங்கள் உங்கள் உறவினர்கள் தான் எனக் கூறி கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர்.

பெண் கொலை

பெண் கொலை

ஆனால் அந்த பெண்ணின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லாமல், காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை சுமார் 3 மணி நேரமாக மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு, அவர்கள் அந்தப் பெண்ணைக் கொன்று, அவரது உடலை கிணற்றில் வீசினர் என தெளசா மாவட்ட போலீசார் கூறியுள்ளன.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட பெண் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவரது பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை மாலை தவுசாவின் ராம்கர் பச்சவாரா காவல் நிலையத்தில் தங்கள் மகளை காணவில்லை என்று புகார் அளித்தனர். இந்நிலையில் தான் அங்கிருந்த கிணற்றில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததையடுத்து , திங்கள்கிழமை அதிகாலையில் உடல் மீட்கப்பட்டது.

குற்றவாளி கைது

குற்றவாளி கைது

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கலுராம் மீனா கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெளச மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளர். முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அந்தப் பெண் யார் என்றே தெரியாது என்று கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெண்ணின் உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+