For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியிலும் போய் ஆதாரைத் திணிச்சுட்டாங்கய்யா!

2017 ஆம் ஆண்டின் சிறந்த இந்தி வார்த்தை ஆதார் என ஆக்ஸ்போர்டு அகராதி பிரகடனம் செய்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: இந்தியாவில் ஆதார் இல்லாத மனிதன் என்பது போல அனைத்திற்கும் ஆதார் தேவை என்றாகிவிட்டது. எங்கும் ஆதார் எதிலும் ஆதார் என்று அனைத்திலும் இணைக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். 2017ஆம் ஆண்டின் சிறந்த இந்தி வார்த்தையாக ஆதார் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆதார் என்னும் வார்த்தையை கேள்விபடாத மக்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு கோட்டையிலிருந்து கடைகோடி வரை ஆதார் பரவலாக பேசப்பட்டிருக்கிறது. இந்தியில் ஆதார் என்றால் அடிப்படை என்று அர்த்தம்.

Aadhaar is Oxford dictionary’s Hindi word of 2017

நாட்டு மக்களின் அடையாளமாக மாறிவிட்டது ஆதார். நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஆதாரை தனிமனிதனின் அடிப்படை உரிமையாக்கினார். மேலும் மத்திய, மாநில திட்ட நல உதவிகளை பெற ஆதார் எண் அவசியமாக்கப்பட்டது.

வங்கி கணக்கு, பான் எண், ரேஷன் கார்டு உள்பட பல்வேறு அரசு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. தற்போது நாடு முழுவதும் உள்ள 120 கோடி மக்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு அகராதி, கடந்த ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ஆதார் என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய திருவிழாவில், பத்திரிகையாளர் சவுரவ் திவிவேதி இதனை தெரிவித்துள்ளார்.

'மித்ரன், நோட்பந்தி, காவ் - ரக் ஷக்' போன்ற வார்த்தைகளும், இந்த சிறப்பை பெறுவதற்காக பரிசீலிக்கப்பட்டன. இருப்பினும், பிற வார்த்தைகளை விட, ஆதார் என்ற வார்த்தை நாடு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்ட வார்த்தையாக இருந்து. மக்களிடம் பரவலாக பேசப்பட்ட ஆதாருக்கு 2017ஆம் ஆண்டின் சிறந்த இந்தி வார்த்தை என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பத்திரிகையாளர் சவுரவ் திவிவேதி தெரிவித்துள்ளார்.

English summary
Oxford Dictionaries has chosen Aadhaar as the Hindi word of 2017Aadhaar gained popularity as a word due to Aadhaar card, which was in news last year and is likely to remain in highlight this year as well
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X