நடிகர் சித்தார்த், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலட்சுமி, ககன்தீப்சிங் பேடிக்கு என்.டி.டிவி விருது
மும்பை: சென்னையில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்களாக செயல்பட்ட அசோக், அர்ஜுன், ஆறுமுகம் ஆகிய மூன்று சிறுவர்களையும் 'இந்தியன் ஆஃப் தி இயர் 2015' ஆக தேர்ந்தெடுத்து விருது வழங்கி என்.டி.டி.வி கவுரவித்தது. இதே காரணத்துக்காக, நடிகர் சித்தார்த், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமுதா, கஜலட்சுமி மற்றும் ககன்தீப் சிங் பேடி ஆகிய மூவருக்கும் 'இந்தியன் ஆஃப் தி இயர் 2015' விருது வழங்கி கவுரவித்தது என்.டி.டிவி
என்.டி.டிவி நிறுவனம் ஆண்டுதோறும் சாதனை படைத்தவர்களுக்கு இந்தியன் ஆஃப் த இயர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த ஆண்டு சென்னையில் மழை - வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக, நாட்டுக்கு சேவையாற்றியவர்கள் பிரிவில் நடிகர் சித்தார்த், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலட்சுமி, ககன்தீப்சிங் பேடி, மற்றும் மூன்று சிறுவர்களுக்கும் இந்த ஆண்டு இந்த கவுரவும் அளிக்கப்பட்டது.

விருதினை பெற்றுக்கொண்ட சிறுவர்கள் அசோக், அர்ஜுன், ஆறுமுகம் ஆகிய மூவரும்"நாங்கள் நன்றாக படித்து இன்னும் நாட்டுக்கு சேவையாற்றுவோம்" என்று தெரிவித்தனர்.
வத்தலகுண்டுவிலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த இவர்களின் பெற்றோர்கள் சேப்பாக்கம் ரயில் பாலத்துக்கு கீழே கூவம் கால்வாயை ஒட்டி குடிசை போட்டு வசித்தனர். மழை வெள்ளத்தில் அத்தனையும் அடித்துச் சென்றுவிட்டது. தற்காலிக வசிப்பிடத்தில் இருந்த போதும் அந்த சோகம் கொஞ்சமும் இல்லாமல் உற்சாகமாக தன்னார்வலர்களாக பணியாற்றினர் இந்த சிறுவர்கள்.
2015ம் ஆண்டின் என்.டி.டிவி விருது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெய்வால் ஆகியோருக்கும் அளிக்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது தீபிகா படுகோனேவிற்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலிக்கும் வழங்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications